Uddhav Thackeray : என்னை சிறையில் தள்ளுங்கள்: ரெய்டு குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் ஆவேசம்..
என்னை சிறையில் தள்ளுங்கள் என்று தன் உறவினர்களிடம் ரெய்டு நடத்தியது குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
என்னை சிறையில் தள்ளுங்கள் என்று தன் உறவினர்களிடம் ரெய்டு நடத்தியது குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று உத்தவ் தாக்கரே பேசும்போது, ''நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வாருங்கள். ஆனால் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அனைத்து மோசமான விஷயங்களையும் செய்யாதீர்கள்.. எங்களுடைய ஆனால் யாருடைய குடும்ப உறுப்பினர்களையும் துன்புறுத்தாதீர்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்து எப்போதுமே நாங்கள் கவலைப்பட்டதில்லை.
அதிகாரத்துக்கு வருவதற்காக எங்களைச் சிறையில் தள்ள விரும்புகிறீர்கள் என்றால், என்னை சிறையில் தள்ளுங்கள்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக வருமான வரித்துறை சார்பில் உத்தவ் தாக்கரே மனைவியின் சகோதரர் சொத்துகளின்மீது தொடர்ச்சியான சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதில், பணமோசடி வழக்கில் அவரது சொத்துகளில் அமலாக்கத் துறை ரூ.6.45 கோடியை முடக்கியது.
உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மியின் சகோதரர் ஸ்ரீதர் மாதவ் பட்டாங்கர். இவர் ஸ்ரீ சாய்பாபா கிரிகானிர்மிதி பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிர மாநிலத்தில் அமலாக்கத் துறை பல்வேறு நிறுவனங்களில் சோதனையை நடத்தி வருகிறது. அரசியல் காரணங்களுக்காகவே இந்த சோதனைகள் மத்திய பாஜக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருவதாக, ஆளும் சிவசேனா அரசு குற்றம் சாஅட்டி வருவதாகக் கூறி வருகிறது.
முன்னதாகக் கடந்த மாதம் தாவூத் இப்ராஹிம் தொடர்பான பண மோசடி வழக்கில், மகாராஷ்டிர அமைச்சர் நவாம் மாலிக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா ஆட்சி: பின்னணி
2019 மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் 61.4% வாக்குப்பதிவுக்குப் நடந்த பிறகு, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மற்றும் சிவசேனா (SHS) கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அரசு அமைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அரசியல் நெருக்கடியால் கூட்டணி கலைக்கப்பட்டது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அமைச்சர்கள் குழு அமைக்கப்படாததால், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
23 நவம்பர் 2019 அன்று, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் 26 நவம்பர் 2019 அன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜினாமா செய்தனர். 28 நவம்பர் 2019 அன்று, சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைத்த மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியின் கீழ் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்