மேலும் அறிய

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- நாராயணசாமி...!

’’மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி இன்னும் 100 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவோம்- முன்னாள் முதல்வர் நாராயணசாமி’’

தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் 100 நாட்களுக்குள் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசு நிறைவேற்றாவிட்டால் தெருவில் இறங்கி போராடுவோம் என நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்  நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நாட்டின் வளர்ச்சிக்காகவும், கட்டமைப்பை மேம்படுத்தவும், தொழிற்சாலைகளை உருவாக்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் 100 லட்சம் கோடியில் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அறிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஒரே திட்டத்தை திரும்ப திரும்ப வெளியிட்டு வருகிறார். அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற எந்தவித முனைப்பும் காட்டவில்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை.

 


தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- நாராயணசாமி...!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து விவசாயிகள் பிரச்சினை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, கொரோனாவை மத்திய அரசு தவறான முறையில் கையாண்டது, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை பிரதமரும், மத்திய அரசும் ஏற்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டு குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே முடிக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் பல சட்டங்களை அவசர அவசரமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது ஜனநாயக படுகொலை. இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 


தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- நாராயணசாமி...!

தமிழ் நாடு முதலமைச்சர்   ஸ்டாலின் தலைமையிலான அரசு 100 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. 100 நாட்களின் சிறப்பான சாதனைகளை வெகுவாக பாராட்டுகிறோம். மக்களின் சுமையை குறைக்க பெட்ரோல் விலையில்  மாநில வரியில் இருந்து 3 ரூபாய் குறைத்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தமிழகத்தை ஒப்பிடும் போது புதுவையில் டீசல் 3 ரூபாயும், பெட்ரோல் விலை 2 ரூபாயும் விலை குறைவாக இருக்கும். இந்தநிலை தற்போது மாறி உள்ளது.

இதனால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரை முதலமைச்சர்  ரங்கசாமி தொடங்க உள்ளார். முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை 3 குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் ஆட்சி பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த 3 மாதங்களில் என்ன செய்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.


தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- நாராயணசாமி...!

புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக உள்ளது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த என்.ஆர். காங்கிரஸ், பாஜக கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி  தெருவில்   இறங்கி  என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget