மேலும் அறிய

Ideas Of India 3.0: தொடங்கியது ஏபிபி நெட்வர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" - ”மக்களின் எதிர்பார்ப்புகளுக்கான நிகழ்வு”

ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா " நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" நிகழ்ச்சி, அரசியல் , திரைத்துறை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

ஏபிபி-யின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" :

ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர்.

”மக்களின் எதிர்பார்ப்புகளுக்கான நிகழ்வு”

குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே, “ பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு ஆண்டில் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' நிகழ்வை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த உலகம் முழுவதும் அறுபது தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஏபிபி நெட்வொர்க்கின் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' மக்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.  

வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் - அதிதேப் சர்கார்:

இவரை அடுத்து பேசிய ஏபிபி நெட்வர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார், “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஆன்மீகம் மற்றும் கருப்பொருள்களின் இணைவு உச்சத்தை எட்டியது. ராமர் 'பாரதத்தின் அடித்தளம்' என்று பிரதமர் கூறினார். விவான் மர்வா மில்லினியல்ஸ் புத்தகம்,  2019 இல் நரேந்திர மோடியின் அமோக வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. போதிய வேலை உருவாக்கம் இல்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இல்லை. ஆனால் டெல்லியில் உள்ள பழைய உயரடுக்குகளால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்கள் தைரியமான தீர்க்கமான தலைமையை கோருகின்றனர். இளம் வாக்காளர்கள் அடையாளம் காணும் தலைவர், அதிக வேலை வாய்ப்புகளை மனிதாபிமானத்துடன் எவ்வாறு உருவாக்குவது என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

”2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா”

மஹிந்திரா குரூப்பின் தலைமை செயல் அதிகாரியான அனிஷ் ஷா பேசுகையில், “இந்தியாவிற்கான எனது ஆலோசனை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். பொருளாதார வளர்ச்சியானது சமூகத்திற்கு நல்லது செய்வதோடு சமநிலையில் இருக்க வேண்டும். வளர்ச்சி அனைத்துப் பிரிவுகளிலும் பகிரப்பட வேண்டும். பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரத் பார்வை தைரியமானது. அதன்படி,  2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதாவது 23 ஆண்டுகளில் உற்பத்தி 16 மடங்கு வளர வேண்டும். ஏற்றுமதி 11 மடங்கு வளர வேண்டும். பட்ஜெட் அரசியலை விட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்ததை நாங்கள் பார்த்தோம். இது மூலதன செலவினங்களுக்கு அதிக முதலீடு மற்றும் நிதி ஒழுங்குமுறைக்கான பல வழிமுறைகள் மூலம் நீண்ட கால வளர்ச்சியை அமைத்து வருகிறது. உள்ளூர் உற்பத்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பண்ணை செழிப்பு மற்றும் அடுத்த தலைமுறைக்கான நிலைத்தன்மை ஆகியவை நீண்ட கால வளர்ச்சிக்கு முக்கியமானவை” என பேசியுள்ளார். 

அடுத்து நடைபெற உள்ள விவாதங்கள்:

சுயெல்லா பிரேவர்மேன், எம்.பி., சசி தரூர், இந்திய - அமெரிக்க எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி, சிற்ப கலைஞர் சுபோத் குப்தா, சப்யசாசி நிறுவனர் சப்யசாசி, அரசியல் திறனாய்வாளர் பேராசிரியர் சுனில் கில்னானி, நடிகை கரீனா கபூர் கான், நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் விவாதிக்க உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget