Ideas of India 2023: பாஜக பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது - கவிதா கல்வகுண்ட்லா
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாட்டின் 2ஆவது நாள் நடைபெற்று வருகிறது.
LIVE
Background
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய டெல்லி முதலமைச்சர், துணை முதலமைச்சர் சிசோடியா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இவ்விழாவில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா ஒரு 'பொய்' வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்படுவார் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2ஆவது மாநாட்டின் முதல் நாளான நேற்று, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ், முன்னாள் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தர், பாடகர்கள் லக்கி அலி மற்றும் சுபா முத்கல், எழுத்தாளர்கள் தேவ்தத் பட்டநாயக், நடிகைகள் சாரா அலி கான், ஜீனத் அமன், நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் வாஜ்பாய், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, விளையாட்டு நட்சத்திரங்கள் ஜ்வாலா குப்தா மற்றும் வினேஷ் போகட் ஆகியோரும் முக்கிய தலைப்புகளில் உரையாற்றினர்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டை நேரலையாக பார்ப்பது எப்படி?
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாடு, ABP live youtube சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாட்டின் அமர்வுகள் ஏபிபி நெட்வொர்க்கின் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.
சிக்கலான உலக சூழல்:
இந்தியாவை பொறுத்தமட்டில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. உலக வரலாற்றில் இத்தகைய தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல், எழுச்சி பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற எதிர்ப்பரசியல் என உலகில் முக்கியமான அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இந்த உச்ச மாநாடு நடைபெற்று வருகிறது.
பாஜக பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது - கவிதா கல்வகுண்ட்லா
பாஜக பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது என பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த கவிதா கல்வகுண்ட்லா தெரிவித்தார்
சிறந்த நிர்வாகம் மற்றும் மேம்பாடே எங்களது நோக்கம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
சிறந்த நிர்வாகம் மற்றும் மேம்பாடே எங்களது நோக்கம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்
” கட்சி சின்னம், பெயர் தேவையில்லை; பாலாசாகேப்பின் சித்தாந்தங்கள் போதும் “ மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே
எங்களுக்கு கட்சி சின்னம் மற்றும் பெயர் தேவையில்லை. பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தங்கள் எங்களுக்கு போதும், அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
மத்திய அரசு, பிரதமரிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கிறது- மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே
மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கிறது என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களை உருவாக்குவது கள்ள சந்தையாக மாறியுள்ளது - இயக்குநர் சேகர் கபூர்
இந்தியாவில் ஒரு படம் எடுப்பது என்பது கள்ள சந்தை போல மாறி வருகிறது என, இயக்குநர் சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.