20 மாதத்தில் 6 விபத்துக்கள்... 5 விமானிகள் மரணம்... MiG-21 விமானங்களுக்கு விடை கொடுக்க முடிவு!
MiG-21 கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஓய்வு பெறுவதாக இருந்தது, ஆனால் LCA தேஜாஸ் விமானத்தை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் IAF இந்த விமானங்களை தொடர்ந்து பறக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
சமீபத்திய போர் விமான விபத்துகளுக்கு மத்தியில், இந்திய விமானப்படை இப்போது செப்டம்பர் 30 க்குள் ரஷிய தயாரிப்பான MiG - 21 பைசன் விமானத்தின் மேலும் ஒரு படைப்பிரிவை ஓய்வு பெற செய்யும் முடிவை எடுத்துள்ளது. வியாழன் மாலை, ராஜஸ்தானின் பார்மரில் மிக் -21 வகை 69 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், இளம் விமானி லெப்டினன்ட் ஏ பால் மற்றும் விங் கமாண்டர் ராணா உட்பட இரு விமானிகள் வீரமரணம் அடைந்தனர்.
"ஸ்ரீநகர் விமானத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட எண் 51 படைப்பிரிவில் உள்ள இந்த விமானங்களில் சில செப்டம்பர் 30 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு, மூன்று படைப்பிரிவுகள் மட்டுமே இந்த விமானம் சேவையில் விடப்பட்டு படிப்படியாக அவையும் 2025 ஆம் ஆண்டிற்குள் வெளியேறும்" என்று IAF இன் வட்டாரங்கள் ANI செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
இப்போது ஒவ்வொரு ஆண்டும், இந்த விமானங்கள் ஒவ்வொன்றும் ஒரு படைப்பிரிவிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். பிப்ரவரி 27, 2019 அன்று இந்தியா மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலை முறியடிப்பதற்கு, விங் கமாண்டர் (தற்போது குரூப் கேப்டன்) அபிநந்தன் வர்தமான் எஃப் -16 ஐ எடுத்துச் சென்றதன் மூலம் 51 வது படைப்பிரிவு பிரபலமானது.
மிக்-21 விமானம் , வான்-விமானப் போரில் F 16-ஐ வீழ்த்திய ஒரே நிகழ்வு இதுவாகும். IAF ஆனது MiG-21 போர் விமானங்களுக்கு பதிலாக Su-30 மற்றும் உள்நாட்டு இலகுரக போர் விமானம் (LCA) போன்ற அதிக திறன் கொண்ட விமானங்களை கொண்டு வருகிறது.
கடந்த 20 மாதங்களில் 6 மிக் 21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஐந்து விமானிகள் உயிரிழந்துள்ளனர். MiG-21 கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஓய்வு பெறுவதாக இருந்தது, ஆனால் LCA தேஜாஸ் விமானத்தை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் IAF இந்த விமானங்களை தொடர்ந்து பறக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. IAF இந்த விமானங்களில் பறக்கும் முன் விரிவான சோதனைகளை மேற்கொள்கிறது. மேலும் விமானி புறப்படுவதற்கு முன்பு அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கவனிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிறுத்தப்படும் இந்த படைப்பிரிவு விரைவில் எதிர்காலத்தில் அதிக திறன் கொண்ட விமானத்துடன் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியட்டுள்ளது.
IAF retiring one MiG-21 squadron by September end, entire fleet to be phased out by 2025
— ANI Digital (@ani_digital) July 29, 2022
Read @ANI Story |https://t.co/uGuWOJM27t#IAF #MIG21 #Indianairforce #mig_21 pic.twitter.com/2LJbFs2ZBt