மேலும் அறிய

பத்மஸ்ரீயை திருப்பி தருகிறேன்... என் கேள்விக்கென்ன பதில்? - கங்கனா ரணாவத்

விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்கிறேன் - கங்கனா ரணாவத்

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில்  ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கங்கனா பாஜகவின் ஆதரவாளரும்கூட.

இந்த சூழலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரணாவத், "உண்மையிலேயே 2014ஆம் ஆண்டுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. 194ல் கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?" என்று பேசினார். இந்தப் பேச்சை கண்டித்து கங்கானவை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

View this post on Instagram
 
A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)

அதுமட்டுமின்றி, "கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசத்தையும் அதன் ஹீரோக்களையும் அவமதிக்காத வகையில் மன உளவியல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ள நிலையில், கங்கனா மீது ஆம் ஆத்மி கட்சி வழக்கு பதிவு செய்யுமாறு மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,   “நான் அன்று பேசிய நிகழ்விலேயே அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்‌ஷ்மிபாய் மற்றும் வீர் சாவர்க்கர் போன்ற தலைவர்களின் தியாகத்துடன், 1857ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கான முதல் கூட்டுப் போராட்டம் பற்றியும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

பத்மஸ்ரீயை திருப்பி தருகிறேன்... என் கேள்விக்கென்ன பதில்? - கங்கனா ரணாவத்

1857 போராட்டம் பற்றி எனக்கு தெரியும். ஆனால் 1947-ல் எந்தப் போர் நடைபெற்றது. 1947-ல் யாராவது எனக்கு அப்படி ஒன்று நடந்ததாக தெரியப்படுத்தினால், விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்கிறேன்.

நான் மட்டும் காங்கிரஸை பிச்சைக்காரன் என்று சொல்லவில்லை" என்று கூறி காங்கிரஸை "பிச்சைக்காரன்" என்று அழைத்தது தொடர்பாக ஒரு வரலாற்று புத்தகத்தின் கருத்துகளை மேற்கோள் காட்டியிருந்தார்.

பத்மஸ்ரீயை திருப்பி தருகிறேன்... என் கேள்விக்கென்ன பதில்? - கங்கனா ரணாவத்

மேலும், ``சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லக்‌ஷ்மி பாய் வாழ்க்கைப் படமான மணிகர்னிகாவில் நடிக்கும்போது 1857-ஆம் ஆண்டு போராட்டத்தைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தேன். இந்தியாவில் வலதுசாரிகளால் தேசியவாதம் வளர்ந்தது என்பதை மறுத்தால் காந்தி ஏன் பகத்சிங்கை இறக்க அனுமதித்தார், ஏன் நேதாஜி கொல்லப்பட்டார், ஏன் வெள்ளைக்காரர்களால் இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு பிரிவினைக் கோடு வரையப்பட்டது, சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தியர்கள் ஒருவரையொருவர் ஏன் கொன்றார்கள் என்பதை எனக்கு புரிய வையுங்கள்.

பத்மஸ்ரீயை திருப்பி தருகிறேன்... என் கேள்விக்கென்ன பதில்? - கங்கனா ரணாவத்

என்னைப் பொறுத்தவரை நேதாஜி தலைமையிலான ஐஎன்ஏ-வின் சிறு கலகத்தால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அதன்பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமராக இருந்திருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget