5 Rupee Meal : மகிழ்ச்சி.. சாதம், சாம்பார், காய்கறி, ஊறுகாய்.. வெறும் 5 ரூபாய்க்கு.. அரசு அறிவித்த சூப்பரான திட்டம்..
ஜிஹெச்எம்சியின் ஒவ்வொரு வட்டத்திலும் 32 இடங்கள் கண்டறியப்பட்டு, 5 ரூபாய் கட்டணத்தில்...
மாநில அரசின் அன்னபூர்ணா உணவுத்திட்டத்தின் கீழ் ஐதராபாத்தில் 5 ரூபாய்க்கு இருக்கை வசதிகளுடன் ஏழை மக்களுக்கு உணவு வழங்க கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.
அன்னபூர்ணா உணவு திட்டம் :
மாநில அரசின் அன்னபூர்ணா உணவுத் திட்டம், மிகக் குறைந்த விலையில் சுகாதாரமான உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது 2014 இல் தொடங்கப்பட்டதிலிருந்து ஐதராபாத் நகரத்தில் கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.லாக்டவுனுக்கு முன், இந்த திட்டம் நகரத்தில் சுமார் 150 மையங்களில் செயல்படுத்தப்பட்டு, ஒரு நாளைக்கு சுமார் 45,000 பேருக்கு உணவை வழங்கி வருகிறது. முதல் லாக்டவுனில் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அன்னபூர்ணா உணவு திட்டத்தின் மூலம் முற்றிலுமால உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மதிய உணவின் போது நடமாடும் அன்னபூர்ணா கேண்டீன் (எளிதில் கவனிக்கக்கூடிய வேன்கள் மூலம்) உட்பட 373 மையங்களிலும் இரவு உணவின் போது 259 மையங்களிலும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரிவுப்படுத்த திட்டம்:
ஜிஹெச்எம்சியின் 'அன்னபூர்ணா கேண்டீன்களை' விரிவுப்படுத்த ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தற்போது திட்டமிட்டுள்ளது. ஜிஹெச்எம்சியின் ஒவ்வொரு வட்டத்திலும் 32 இடங்கள் கண்டறியப்பட்டு, 5 ரூபாய் கட்டணத்தில் உணவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கை வசதிகளுடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Same food from akshayapatra is supplied by ghmc muncipal corp of hyderabad for 5 rupees per person....people like it very much ang praise it highlyhttps://t.co/wJKGlIt4vj
— Telugu_vaaru (@Telugu_vaaru) June 2, 2019
என்னென்ன கிடைக்கும் 5 ரூபாய்க்கு ?
மிகக் குறைந்த விலை உணவாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் வெறும் 5 ரூபாய்க்கு 400 கிராம் சாதம், 120 கிராம் சாம்பார், 100 கிராம் காய்கறி குழம்பு, 15 கிராம் ஊறுகாய் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இத்திட்டம் முழுவதுமாக வழங்குகிறது.
அன்னபூர்ணா உணவு திட்டத்தின் கீழ் 2020-21ல் 2,29,46,080 உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. 2014 முதல், இத்திட்டம் 185.89 கோடி செலவில் மொத்தம் 9,67,53,612 உணவுகளை மக்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்