கூடுதல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஐஆர்சிடிசி ஐடியுடன் ஆதாரை லிங்க் செய்வது எப்படி? - முழு விபரம்
ஐஆர்சிடிசி ஐடியுடன் ஆதாரை இணைத்தால் மாதம் 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்துகொள்ளும் சலுகையை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.
ரயிலில் கூடுதல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற தங்களது இணையதளம் மற்றும் செயலியில் பயன்படுத்தப்படும் யூசர் ஐடியுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற இந்திய ரயில்வேயின் அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக இரயில் பயண சேவை இருக்கும் நிலையில், இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது ஐஆர்சிடிசி விதிப்படி ஒருவர் ஒரு ஐடி கணக்கில் இருந்து அதிகப்பட்சமாக 6 டிக்கெட்டுகளை மட்டுமே பெற முடியும் என இருந்தது. இந்த விதி தற்போது மாற்றப்பட்டு ஐஆர்சிடிசி ஐடியுடன் ஆதாரை இணைத்தால் மாதம் 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்துகொள்ளும் சலுகையை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.
People can now book 24 train tickets in a month on IRCTC website, app if their user ID is linked to Aadhaar, otherwise only 12 tickets can be bought. So far, IRCTC allowed people to book 6 tickets a month if the account is not connected to Aadhaar and 12 if it is linked
— Press Trust of India (@PTI_News) June 6, 2022
அதாவது ஆதாரை இணைக்காவிட்டால் 6 டிக்கெட்டுகள் என்றிருந்த நிலை தற்போது 12 ஆக மாற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இணைத்திருந்தால் 12 டிக்கெட்டுகள் பெற முடியும் என்ற எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாம் கீழ்காணும் வழிமுறைகளில் ஐஆர்சிடிசி ஐடியுடன் ஆதாரை இணைக்கலாம்.
- முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று அங்கு உங்களுடைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உட்செல்லவும்.
- இப்போது தோன்றும் ஆப்ஷன்களில் “My Account” சென்று link your aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் உங்களுடைய ஆதார் எண்ணை கொடுத்து Send OTP என்பதை கொடுக்கவும்.
- தற்போது உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ சரியாக பதிவிடவும்.
- கடைசியாக Verify என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஆதார் இணைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்