மேலும் அறிய
ஜம்மு காஷ்மீர் பள்ளிகளுக்கு ஏப்.18 வரை விடுமுறை அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு இரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

JAMMU_SCHOOL
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக பள்ளிகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 18 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஏப்ரல் 18 ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஏப்ரல் 11 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்



















