Coonoor Chopper Crash | தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்..
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்
இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 14 பேர் Mi17 V5 என்ற ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டரானது கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பிபின் ராவத் குடும்பத்தினரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவசரமாக கூடியுள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்
Defence Minister Rajnath Singh is monitoring the situation following crash of IAF chopper carrying CDS Bipin Rawat & others. A meeting of senior Defence Ministry officials is underway. Singh has briefed the PM about the crash: Sources
— ANI (@ANI) December 8, 2021
(File photo) pic.twitter.com/3XUZsfLqDP
இதனையடுத்து அவர் தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Chief Minister MK Stalin to move Coimbatore from Chennai Airport today evening and then move to Nilgiris, following the incident of military chopper crash between Coimbatore and Sulur.
— ANI (@ANI) December 8, 2021
(File photo) pic.twitter.com/R4EDDNzLwD
இதற்கிடையே விபத்தில் காயமடைந்தவர்களுகு சிகிச்சை அளிப்பதற்காக சூலூர் விமானப் படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவ குழு சென்றுள்ளது. அதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் இன்று குன்னூர் விரைகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்