மேலும் அறிய
Advertisement
Today Headlines: அமேசானிலும் ஆட்குறைப்பு.. அடுத்த 4 நாட்களுக்கு மழை.. அர்ஜுனா, கேல் ரத்னா விருது அறிவிப்பு.. இன்னும் பல!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம்: வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் உத்தரவு
- சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்
- வங்ககடலில் அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்தம்: 19ம் தேதி முதல் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்
- ஒரே நாளில் குரூப் 1தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள்; தேர்வு அட்டவணையை மாற்ற கோரிக்கை
- தமிழ்நாட்டின் 6 ஆதிதிராவிடர் நல பள்ளிகள்: மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்த ரூ.14,82 கோடி ஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் திமுகவுடன் பயணிக்கிறோம் -கே.எஸ். அழகிரி
இந்தியா:
- மண்டல கால பூஜைக்களுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு; பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரத் தயார் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்புரி தெரிவித்துள்ளார்.
- தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிரரம்ப்' (prarambh) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை புவி வட்டார சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது.
- கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி, 'இந்தியா ஆன் தி சென்டர் ஸ்டேஜ்' என்ற டூடுலுக்காக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
- மிசோரம் மாநிலத்தின் கல்குவாரியில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 15 தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கினர்.
உலகம்:
- ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து அமேசானில் ஆட்குறைப்பு நடவடிக்கை; பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்
- ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றார் பிரதமர் மோடி; பாலி தீவின் பாரம்பரிய நடனமாடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- அடுத்த 15 ஆண்டில் இந்தியாவின் தேவை நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.68.23 லட்சம் கோடி- உலக வங்கி மதிப்பீடு
- உலக நிதி அமைப்புகளிடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி பெற்று பொருளாதாரத்தை சீர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை இன்றுடன் 800 கோடியைத் தொடப்போகிறது எனும் தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு:
- தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது: டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிப்பு
- கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருது பெற்ற சரத்கமல், பிரக்ஞானந்தா மற்றும் இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- ஷர்துல் தாக்குரை சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வாங்க விருப்பம் தெரிவித்ததாக தகவல்
- டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான ஐசிசி சிறந்த அணியில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion