மேலும் அறிய
Advertisement
Headlines Today: மாலை 7 மணி தலைப்புச் செய்திகள்...! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..?
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவை ஒட்டி கோலாகலமாக தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடமிழுத்தனர்.
- தஞ்சை, திருவையாறு அருகே விளைநிலங்களை அழித்து புறவழிச்சாலைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு. விவசாயிகளின் தொடர் போராட்டத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை.
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஏமாற்றப்பட்டதாக புகார்.
கட்டாத வீட்டுக்கு பணம் விடுவித்து அதனை எடுத்துக் கொண்டு மூதாட்டி ஏமாற்றப்பட்டதாக புகார். - சீர்காழி அருகே வனகிரியில் கடல் சீற்றம் காரணமாக 20 லட்ச ரூபாய் மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கியது.
- மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்வு. சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில் அறிவிப்பு.
- புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரெங்கசாமி அறிவிப்பு.
- சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை பலரும் கலந்துகொண்டனர்.
இந்தியா:
- குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்டப் பரப்புரை நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிச.08ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
-
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை மற்றும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஓயோ நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஓயோ நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதுடன் 250 ஊழியர்களை புதிதாக பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
-
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பயணிகள் பிரிவில் இந்தியன் ரயில்வேஸின் வருவாய் 76 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஷ்ரத்தா கொலை வழக்கை போலவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலனே கொலை செய்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. மேற்கு டெல்லியின் திலக் நகரில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 35 வயது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறி ஒருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம்:
- இந்தோனேசியா நாட்டில் ஜாவாவில் 100 கி.மீ ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிட்ட 44,611 இந்திய ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு:
- உலகக்கோப்பை கால் பந்து திருவிழாவில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் தொடக்கம்.
நெதர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை. - நாளை இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. வங்கதேசத்தின் மிர்பூர் மைதானத்தில் நாளை காலை 11.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion