Watch Video : "அடியா இல்ல இடியா.." கூரைக்கு பறந்த பந்து.. வாயடைத்து நின்ற ஹாரிஸ் ராஃப்
Marcus Stoinis : ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்த பந்து மைதானத்தின் மேற்கூரையில் விழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய் வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்த சிக்சரில் பந்தானது மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது.
டி20 தொடர்:
ஹோபார்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20ஐ 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வயிட் வாஷ் செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் விளாசினார், அவரின் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் நிர்ணயித்த 118 ரன்களை 11.2 ஓவர்களில் துரத்து பிடித்தது.
இதையும் படிங்க: RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
மீண்டும் பாக் சொதப்பல்:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த பாகிஸ்தான், பாபர் அசாம் மற்றும் ஹசிபுல்லா கான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பவர்பிளேயில் 58/1 எடுத்தது. ஆனால் வழக்கம் போல கிடைத்த நல்ல தொடக்கத்தை கோட்டைவிட்டனர். ஆடம் ஜம்பாவின் சூழலில் சிக்கி பாகிஸ்தான் தடம் புரண்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.
மைதானத்தின் கூரையில் விழுந்த பந்து:
Oh my god 🤯 this is some hitting 😮💨
— Aussies Army🏏🦘 (@AussiesArmy) November 18, 2024
#AUSvPAK pic.twitter.com/jV0YNFlyWw
ஆஸ்திரேலியா வெற்றி:
இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் மாட் ஷார்ட் (4) மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (18) ஆகியோர் சுமரான தொடக்கத்தை தந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் நிதானமாக ஆடி 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் களம் இறங்கினார். ஹாரிஸ் ரவுஃப் வீசிய ஒன்பதாவது ஓவரில் தனது அதிரடியை தொடங்கிய அவர், அந்த ஓவரில் 20 ரன்கள் குவித்த, இதில் ஒரு பெரிய சிக்ஸர் மைதானத்தின் மேற் கூரையின் மீது விழுந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து இலக்கை எட்டியது மார்கஸ் ஸ்டோய்னில் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.