மேலும் அறிய
Advertisement
Today Headlines : பள்ளிகள் திறப்பு எப்போது? பிரதமர் நாளை சென்னை வருகை..! சில முக்கியச் செய்திகள்!
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று மீண்டும் அறிவிப்பு
- மாநில அரசின் வரிகளை மத்திய அரசு சுரண்டிவிட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் ஆட்சி நடைபெறவில்லை ; ஒரு இனத்தின் ஆட்சி நடக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சென்னையில் பா.ஜ.க. பிரமுகர் வெட்டிப் படுகொலை – பாதுகாப்பு காவலர் பணியில் இருந்தபோதே பயங்கரம்
- தலைநகரம் கொலை நகரமாக மாறி வருகிறது – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
- ராமேஸ்வரத்தில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – வடமாநிலத்தவர் 6 பேரிடம் விசாரணை
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூபாய் 21 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
- குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரியை கடந்த வெயில் – பொதுமக்கள் கடும் அவதி
இந்தியா :
- பிரதமர் மோடி நாளை சென்னை வருகை – 2 ஆயிரத்து 900 கோடி மதிப்புள்ள திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
- சூரியகாந்தி, சோயா எண்ணெய்யை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி : சமையல் எண்ணெய் விலை குறையுமா?
- எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
- நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மூன்று குழுக்களை அமைத்தார் சோனியாகாந்தி
- ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம்
உலகம் :
- இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் சர்வதேச அளவில் நிறைய சாதிக்க முடியும் – ஜோ பைடன்
- அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 18 சிறுவர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு
- உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு
- குவாட் அமைப்பு கூட்டமைப்பின்போது கடற்பகுதியில் சீன, ரஷ்ய விமானங்கள் பரந்ததால் பரபரப்பு
- ஐக்கிய அரபு நாடுகளுக்கு பரவியது குரங்கம்மை – கண்காணிப்பை தீவிரப்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
விளையாட்டு :
- ஐ.பி.எல். போட்டியின் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்
- இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- ஐ.பி.எல். போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது லக்னோ
- ஆசிய ஹாக்கி கோப்பை போட்டியில் ஜப்பானிடம் வீழ்ந்தது இந்தியா
- பிரெஞ்சு ஓபனில் ரஷ்யாவின் மெத்வதேவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion