மேலும் அறிய
Advertisement
Today Headlines: கடந்த 24 மணி நேர நிகழ்வுகள்.. உடனடியாக அறிந்துகொள்ள.. காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நாளை சுதந்திரம் தினம் - கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சுதந்திர தின விருது அறிவிப்பு
- மணிப்பூர் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி - திருச்சி சிவா எம்.பி. கண்டனம்
- சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும் - எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு
- ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் இனி அவசியம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
- நாளை சுதந்திரம் தினம் - தமிழ்நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், 1.20 லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பு
- நாங்குநேரியில் வெட்டப்பட்ட பள்ளி மாணவர்களிடம் ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி நேரில் விசாரணை நடத்தினார்.
- சட்டசபையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் - முதலமைச்சர் பொய்யான தகவலை கூறுவதாக இபிஎஸ் கண்டனம்
- நீட் தேர்வில் தொடர் தோல்வி காரணமாக சென்னையில் மாணவர் தற்கொலை
- சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- உடல்நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ்
இந்தியா:
- சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
- சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 1,800 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு - செல்பி எடுக்க ஸ்பெஷல் ஸ்பாட் அமைப்பு
- எத்தனை முறை பாஜக அரசு பதவி நீக்கம் செய்தாலும் வயநாடுக்கும், எனக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது - ராகுல்காந்தி நெகிழ்ச்சி
- திருப்பதியில் சிறுத்தையின் நடமாட்டம் - மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
- பஞ்சாப்பில் பதுங்கி இருந்த கனடாவைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது
- மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மேலும் 9 வழக்குகளை பதிவு செய்த சி.பி.ஐ.
- மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு - உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி
உலகம் :
- சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவத்தினர்
- இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி
- தைவான் துணை அதிபர் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு
- ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக உயர்வு
விளையாட்டு:
- இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
- உலகக்கோப்பை செஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் தமிழக வீரர் குகேஷ்
- ஆசிய ஹாக்கி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய இந்தியா - தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேற்றம்
- மாமல்லபுரத்தில் இன்று முதல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது - 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion