மேலும் அறிய
Advertisement
Today Headlines: நேற்றைய சம்பவங்கள்.. இன்றைய நிகழ்வுகள்.. மொத்தமாக அறிய காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 225 அரசுப்பள்ளி மாணவர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியின் மனைவியின் சொத்துகள் முடக்கம் - அமைச்சரை செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் திட்டம் இல்லை எனவும் விளக்கம்
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக கனமழை - 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பொழியும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- 3 மாதங்களில் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பு - தமிழ்நாடு அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை
- தமிழ்மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - திருக்குறளின் பெருமை பேசினால் மட்டும் போதாது எனவும் கருத்து
- மேட்டூரில் நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் விவசாயிகள் கலக்கம் - தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை
- தமிழ்நாடு முழுவதும் முருகன் ஆலயங்களில் ஆடி கிருத்திகை விழா கொண்டாட்டம் - காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்
- யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் - 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு
இந்தியா:
- மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று பதிலளிக்கிறார் - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
- மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் - நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி ஆவேச பேச்சு
- பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - அமித் ஷா மற்றும் அதானியின் பேச்சை மட்டுமே மோடி கேட்பதாகவும் குற்றச்சாட்டு
- மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள்
- இந்திய தாயை பாஜக புண்படுத்திக் கொண்டே இருப்பதாகவும், இதற்கெல்லாம் தக்க பாடம் புகட்டப்படும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் ஆவேசம்
- ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைக்கப்படாத விவகாரம் - கடந்த 5 ஆண்டுகளில் பயனாளர்களிடமிருந்து 21 அயிரம் கோடி ரூபாய் அபராதமாக வசூலிப்பு
- மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 730 நாட்கள் விடுமுறை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தகவல்
உலகம்:
- அமெரிக்காவில் சோகம் - ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பலி’
- பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு - பிரதமரின் பரிந்துரையை ஏற்றார் அதிபர்
- பாகிஸ்தான் சிறையில் சி வகுப்பு அறையில் அவதிப்படும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
- இத்தாலி அருகே படகு கவிழ்ந்து 41 அகதிகள் பலி
- பயங்கரவாத தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிற்குள்ளேயே விடை தேடுங்கள் - பாகிஸ்தானிற்கு ஆப்கானிஸ்தான் பதிலடி
- அழகி போட்டியில் பாலியல் அத்துமீறல் - இந்தோனேசியாவில் பங்கேற்ற பெண்கள் புகார்
விளயாட்டு:
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25ம் தேதி தொடங்குகிறது
- ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி - பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் விழ்த்தி இந்திய அணி அபாரம்
- உலகக்கோப்பை தொடரில் இந்திய பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றம் - புதிய போட்டி அட்டவணை வெளியீடு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion