மேலும் அறிய
Advertisement
7AM Headlines: காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..! கடந்த 24 மணிநேரத்தில் உங்களைச் சுற்றி நடந்தது இவைதான்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 202.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுயில் அதிமுக கூட்டணியில் போட்டியிடப்போவது யார்? தொடர்ந்து நிலவும் இழுபறிக்கு மத்தியில் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
- இன்று காலை செய்தியாளர்களைச் சந்திக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்; இடத்தேர்தல் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
- ஈரோடு கிழக்கில் நானே கூட போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரத்துக்கு முன்பே மூட முடியுமா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.
- தமிழ்நாடு முழுவதுவதற்குமான தனது நடைபயணத்தை ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்க உள்ளதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
- ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில், சென்னையில் இருந்து மதுரை வரை 8 நாள் பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொள்ள உள்ளார்.
- ‘ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சி நடக்கிறது’ - அமைச்சர் சேகர்பாபு
- ராமேஸ்வரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறந்து இருக்கும் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
இந்தியா:
- டெல்லியில் நடைபெற்று வரும் காவல்துறை மாநாட்டில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
- புதுச்சேரியில் ட்ரோன் கேமரா பறக்க தடை - காவல்துறை அறிவிப்பு
- மும்பையில் மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.
- 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி.
- பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு 30 லட்சம் அபராதம்.
- நீதிமன்றத்தில் ஒரு நிரபராதி கூட தண்டிக்கபடக் கூடாது - மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ
உலகம்
- உக்ரைன் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து... காரணம் என்ன? அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல்
- பிரிட்டனின் புகழ்பெற்ற பத்திரிகையான வோக்- இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றார் பிரியங்கா சோப்ரா.
- பிரிட்டனில் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம்: எதிர்ப்பை பதிவு செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
- திபெத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நியிஞ்சி (Nyingchi) நகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு
- இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியின் போது பந்துவீச, கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணிக்கு 60 சதவிகிதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்
- சிஎஸ்கே அணிக்காக பயிற்சியை தொடங்கிய தோனி... வைரலாகும் வீடியோ
- கர்நாடக U 14 அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டை போலவே, அன்வே டிராவிட்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தன்னை நிரூபணம் செய்துள்ளார்.
- இந்திய கிரிக்கெட் சம்மேளனம் உடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, பைஜுஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion