Today's Headlines: மேகதாது விவகாரத்தில் கர்நாடகா தீவிரம்.. மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!
இன்றைய முக்கியச் செய்திகள் சில..
இந்தியா:
உத்ரகாண்ட்டின் புதிய அரசு இன்று பதவியேற்பு
தேசிய நெடுஞ்சாலைகளில் 60கிமீக்குள் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி மூடப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
சாலை கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது - சாலை பாதுகாப்பில் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்
மேகதாது திட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு
மின்சார வாகனங்களின் விலை 2 ஆண்டுகளில் குறைந்துவிடும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
வாழ்த்தகுதியற்ற நாடாகும் இலங்கை - தமிழகத்தை நோக்கி அகதிகளாக படையெடுக்கும் மக்கள்
தமிழ்நாடு:
தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதம்
உலகநாடுகளில் மீண்டு அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 13 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்த தமிழ்நாடு அரசு
நீதிமன்றத்தீர்ப்புக்கு பின் மக்கள் நலப்பணியாளருக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
ஏப்ரல் 1 முதல் திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த சதித்திட்டத்தையும் தீட்டவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார்
உலகம்:
உக்ரைன் போர் பற்றி விவாதிக்க சிறப்பு அமர்வுக்காக ஐ.நா.பொதுச்சபை, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று கூடுகிறது
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
விளையாட்டு:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மீண்டும் வர்ணணையாளராக களம் இறங்கவுள்ளார்
இடது விலா பகுதியில் உள்ள எலும்பில் விரிசல் - ரபேல் நடால் 6 வாரங்கள் வரை விளையாட முடியாது என தகவல்