மேலும் அறிய

JDS-BJP: 'எத்தனை அந்தர் பல்டிடா சாமி' வலையில் விழுந்த தேவகவுடா.. பாஜக பக்கா ஸ்கெட்ச்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இந்தியா கூட்டணி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பரபரப்பான தேர்தல் களம்:

பாஜகவும், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் முயற்சியாக, டெல்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. இதற்கிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த கூட்டத்தில், அதிமுக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட போதிலும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கலந்து கொள்ளவில்லை. இதனால், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி அமைக்குமா? இல்லையா? என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வந்தது.

தென்னிந்தியாவை குறிவைக்கும் பாஜக:

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா அறிவித்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அந்தர் பல்டி அடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த அறிவிப்பை பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா வெளியிட்டார். பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், இதை, மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுதி செய்யாமல் இருந்தது.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. தேவகவுடாவின் மகனும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எச்.டி. குமாரசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவையும் இன்று பிற்பகல் சந்தித் பேசினார்.

பாஜக கூட்டணியில் இணைந்த தேவகவுடா:

இதை தொடர்ந்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தொகுதி பங்கீடு குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து நட்டா வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை முழு மனதுடன் வரவேற்கிறோம். 

இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும். 'புதிய இந்தியா, வலிமையான இந்தியா' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்த வாக்குகளில் 9.74 சதவீத வாக்குகளை பெற்றது. இந்தாண்டு மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Embed widget