மேலும் அறிய

Haryana violence: ஹரியானா மதக்கலவரம்.. பஜ்ரங்தள் நிர்வாகி அதிரடி கைது.. நடந்தது என்ன?

ஹரியானா மதக்கலவரம் தொடர்பாக, பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த ராஜ் குமார் என்று அழைக்கப்படும் பிட்டு பஜ்ரங்கி என்பவர் நூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது. மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கலவரத்தில் பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

ஹரியானா மதக்கலவரம்:

இந்த கலவரத்தில் மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். 20 காவல்துறை அதிகாரிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மணிப்பூரை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இம்மாதிரியான சூழலில், கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி, பலரின் வீடுகளை மாநகராட்சி இடித்து வருகிறது. 

வீடுகளில் இருந்து கொண்டுதான், மத ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கலவரக்காரர்கள் கல் வீச்சை நடத்தியதாக மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டிவருகிறது. இந்த நிலையில், மதக்கலவரம் தொடர்பாக, பஜ்ரங் தள்  அமைப்பை சேர்ந்த ராஜ் குமார் என்று அழைக்கப்படும் பிட்டு பஜ்ரங்கி என்பவர் நூ போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். நூ காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு, ஃபரிதாபாத்தில் உள்ள அவரின் வீட்டில் வைத்து பஜ்ரங்கியை கைது செய்துள்ளனர்.

பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர் அதிரடி கைது:

இதுகுறித்து நூ காவல்துறை தரப்பு கூறுகையில், "செவ்வாய்க்கிழமை சதர் நூ காவல் நிலையத்தில் உஷா என்பவர் அளித்த புகாரின் பேரில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்தியது, கலவரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள்,  அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், ஜூலை 31ஆம் தேதி, மதவெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், தபுவா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 295A இன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது" என தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் மதக்கலவரத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்களை குறிவைத்து மாவட்ட நிர்வாகம் அவர்களின் வீடுகளை, சொந்தமான கடைகளை இடித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்ககள் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Google Doodle: 77வது சுதந்திர தினம்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தைக் கவுரவித்து சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget