Crime: ஆணுறுப்பின் மீது பிளாஸ்டிக்கை உருக்கி ஊற்றி வெறிச்செயல்.. இளைஞரை சித்ரவதை செய்த போதை கும்பல் - குஜராத்தில் கொடூரம்
குஜராத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்த நபரை, அடித்து சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Watch Video : குஜராத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்த நபரை, அடித்து சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுவாழ்வு மையம்:
குஜராம் மாநிலம் படான் மாவட்டத்தில் ஜியோனா பகுதியில் போதை மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மேசானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் சுதார் (25). இவர் 6 மாதத்திற்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர் கடந்த மாதம் 17ஆம் திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை மையத்தின் நிர்வாகிகள் அவர் இயற்கையான முறையில் உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின்பு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. எந்த ஒரு பிரச்சனையும் இன்றி ஹர்திக்கின் உடல் தகனம் செய்யப்பட்டாலும், இவரது மரணம் குறித்து காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கொடூர தாக்குதல்:
சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் போதை மறுவாழ்வு மையம் சென்று ஆய்வு செய்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார். அப்போது தான் உண்மைகள் அம்பலமானது. சம்பவத்தன்று பிப்ரவரி 17ஆம் தேதி பாதிக்கப்பட்ட ஹர்திக் தனது கை மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே இதனை அறிந்த சிகிச்சை மையத்தின் ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரே அறையில் அடைத்து வைத்ததாக தெரிகிறது. மேலும், ஹர்திக்கின் கை, கால்களை கட்டிப்போட்டு கயிற்றில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து தாக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, தடியான பிளாஸ்டிக் பைப்பை எடுத்து சுமார் இரண்டு மணி நேரம் கொடூரமாக அடித்துள்ளனர்.
ஆணுறுப்பின் மீது தாக்குதல்:
மேலும், அந்த பிளாஸ்டிக் பைப்பை நெருப்பில் உருக்கி அதனை ஹர்த்திக்கின் அந்தரங்க உறுப்புகளில் ஊற்றியுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலில் தான் ஹர்த்திக் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஹர்திக் இயற்கையாக மரண அடைந்ததாக நாடகமாடி, அவர்களது உறவினர்களையும் மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் நம்ப வைத்தது விசாரணையில் தெரிந்தது. ஆதாரங்களை வெளியானதை தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். சிகிச்சைக்காக சென்ற நபரை மறுவாழ்வு மையத்தில் வேலை செய்பவர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க