Crime: அரசு விடுதி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... கொட்டும் மழையில் இறங்கி போராடிய சிறுமிகள்... ராஜஸ்தானில் பரபரப்பு!
அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவியை உள்ளூர் ரவுடிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெய்ப்பூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலையில் இறங்கி நூற்றுக்கணக்கான சிறுமிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர், ஜம்தோலி பகுதியில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரை உள்ளூர் ரவுடிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், முன்னதாக ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெய்ப்பூரில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இச்சிறுமிகள் வீதியில் இறங்கியும், வழக்கில் தொடர்புடைய ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், தாங்கள் ஏற்கெனவே குற்றவாளிகள் குறித்து புகார் அளித்ததாகவும், ஆனால், காவல் துறையினர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
#WATCH | Girls of govt hostel in Jamdoli area of Jaipur, Rajasthan blocked the Jaipur-Agra Highway yesterday & staged a protest against the alleged molestation of a peer by a local miscreant.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 9, 2022
"FIR has been registered," says a police official
(Viral video confirmed by police) pic.twitter.com/JsPe7tHvqm
இந்நிலையில், போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் ஜெய்ப்பூர் கனோட்டா காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிறுமிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
முன்னதாக, சிறுமிகளின் புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி செய்து வரும் நிலையில், ஜெய்ப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக முன்னதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய்ப்பூரில் முன்னதாக 108 வயது மூதாட்டி ஒருவரின் வெள்ளி மோதிரங்களைத் திருட கொள்ளையர்கள் அவரது கால்களை வெட்டிச் சென்ற கொடூர சம்பவம் பேசுபொருளானது.
Rajasthan | Legs of an elderly woman chopped off by unidentified miscreants to loot her anklets in Jaipur
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 9, 2022
Legs of an elderly woman aged around 100 yrs were cut off & her anklets were looted. She was lying severely injured near her house. Her neck had injuries too:ASP, Galta PS pic.twitter.com/qB31EMaJcL
இந்நிலையில் முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பூனவல்லா, "கெலாட் ஆட்சியில் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது" என சாடியுள்ளார்.