”கடவுளை வணங்க இடமா இல்லை?” : கேரள உயர்நீதிமன்றம் விநோத தீர்ப்பு
இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்களை ஒரு புதிய மசூதி அல்லது பிரார்த்தனை மண்டபத்தை தங்கள் இல்லத்திற்கு அருகில் கட்ட அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள உயர்நீதிமன்றம் இஸ்லாமிய சமூகத்தினர் தங்கள் வீட்டின் அருகே மசூதி கட்ட கோரி தொடர்ந்த மனுவில் மசூதி கட்ட அனுமதி மறுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்களை ஒரு புதிய மசூதி அல்லது பிரார்த்தனை மண்டபத்தை தங்கள் இல்லத்திற்கு அருகில் கட்ட அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றம் இதுகுறித்த தனது தீர்ப்பு அறிக்கையில் "கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். முஸ்லீம் சமூகம் தங்கள்‘ பிரார்த்தனைகளை ’மசூதியில் நடத்த விரும்பினால், அவர்கள் தங்கள் இல்லத்திற்கு அருகில் ஒரு புதிய பிரார்த்தனை மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு பதிலாக அருகிலுள்ள மசூதிக்கு செல்லலாம்" எனக் கூறியுள்ளது.
மேலும் "கேரளாவின் விசித்திரமான புவியியல் நிலைமை காரணமாக அந்த மாநிலம் 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நாம் மதக் கூடங்கள் மற்றும் பிரார்த்தனை அரங்குகளால் நிரப்பிவிட்டோம், அரிதானதைத் தவிர வேறு எந்த புதிய மத இடங்களையும் பிரார்த்தனை அரங்குகளையும் அனுமதிக்கும் நிலையில் நாம் இல்லை” என்று அரியதொரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.