கையில் தாலியுடன் காதலன் வீட்டுக்குச்சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த காதலி!

தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி தாலியுடன் காதலர் வீட்டிற்கு சென்று காதலி ஒருவர் போராடியுள்ளார்.

காதல் தம்பதியின் திருமணங்கள் பெரும்பாலும் பிரச்னையுடன்தான் முடியும். ஆனால் ஒரு சில நேரங்களில் காதலே சிக்கலாக முடிந்துவிடும். அந்தவகையில் தான் தற்போது ஒரு பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன்னுடைய காதலரின் வீட்டிற்கே சென்று போராடியுள்ளார். அவர் அப்படி செய்ய என்ன நடந்தது? எதற்காக அப்படி செய்தார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் மௌரியா. இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்தாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையே நீண்ட நாட்கள் காதல் உறவு இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது திடீரென்று சந்தீப் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயித்துள்ளனர். இதை அறிந்த காதலி தன்னுடைய உறுவினர்களை அழைத்து கொண்டு கையில் தாலியுடன் சந்தீப் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர் தன்னை உடனடியாக சந்தீப்பிற்கு திருமணம் செய்து வைக்குமாறு முறையிட்டுள்ளார். அதற்கு சந்தீப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த இடத்திலேயே தற்கொலை செய்துகொள்ள போவதாக அப்பெண் மிரட்டியுள்ளார். இதனால் சந்தீப் குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பெயரில் வந்த காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி அப்பெண் திரும்பி செல்ல வைத்தனர். மேலும் அவரிடம் புகார் ஒன்றையும் பெற்றுள்ளனர். கையில் தாலியுடன் காதலன் வீட்டுக்குச்சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த காதலி!

இந்த விவகாரம் தொடர்பாக கோரக்பூர் எஸ்பி கூறுகையில், "சந்தீப் என்பவர் ராம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு அதே சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் உறவு இருந்துள்ளது. எனினும் பெற்றோர்கள் சந்தீப்பிற்கு வேறு ஒரு பெண்ணிடம் திருமணம் நிச்சயித்துள்ளனர். இதனால் சந்தீப் தன்னை ஏமாற்றியதாக அப்பெண் புகார் அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

மேலும் சந்தீப் தன்னை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சந்தீப் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு வழக்கும் காவல்துறையில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அவர் மீது அப்பெண் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: IAB on Covid19: குழந்தைகளுக்கு ஆபத்தா.. பீதியூட்ட வேணாம் - ஐ.ஏ.பி. அறிவுரை!

Tags: Women Uttar pradesh marriage Gorakhpur Sandeep Maurya Army man lover asks to marry

தொடர்புடைய செய்திகள்

COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’  தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!

COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’ தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!

புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்

புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்

Navneet Kaur | போலி சாதிச் சான்றிதழ்: ’அம்பாசமுத்திரம் அம்பானி’ பட நடிகை நவ்னீத் எம்.பி.,க்கு அபராதம்

Navneet Kaur | போலி சாதிச் சான்றிதழ்: ’அம்பாசமுத்திரம் அம்பானி’ பட நடிகை நவ்னீத் எம்.பி.,க்கு அபராதம்

Tamil Nadu Coronavirus LIVE News : தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Tamil Nadu Coronavirus LIVE News :  தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Coronavirus Cases India: இரண்டாவது நாளாக 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Coronavirus Cases India: இரண்டாவது நாளாக 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

டாப் நியூஸ்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!