Rabies: நாய் கடித்ததை மறைத்த சிறுவன்...45 நாள் போராட்டம்; ரேபிஸ் நோயால் பறிபோன உயிர்!
தனது நாய், சிறுவனை கடித்ததை நாயின் உரிமையாளர் மறைத்துள்ளார்.
Rabies: நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறாத 14 வயது சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் பயங்கரம்:
நாட்டில் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதலில் இந்த சம்பவம் கேரளாவில் அதிகளவில் இருந்தது. அதனை தொடர்ந்து தெலங்கானா, கர்நாடகா, மும்பை என பல்வேறு பகுதியில் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட தெலங்கானாவின் ஹனுமகொண்டா மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதத்தில் தெருநாய் கடி சம்பவங்கள் 29 முறை அரங்கேறியுள்ளது. ஹைதரபாத்தின் ஆம்பர்பேட்டில் கடந்த மாதம் 5 வயது சிறுவன் தெருநாய் கடித்து உயிரிழந்தான். இதனால் தெரு நாய்க்கடி சம்பவத்தால் பலரும் அடிக்கடி பாதிக்கப்படுவதால், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
14 வயது சிறுவன் உயிரிழப்பு:
உத்தர பிரதேச மாநிலம் புலந்தசாஹர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஷவாஷ். இந்த சிறுவனுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு அவரின் பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. தனது நாய், சிறுவனை கடித்ததை நாயின் உரிமையாளர் மறைத்துள்ளார். நாய் கடித்ததை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். பெற்றோர் திட்டுவதாக எண்ணி சிறுவன் சொல்லாமல் இருந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில், சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் சரியாக சாப்பிடாமல், தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். மேலும், சோர்வு ஏற்பட்டு அடிக்கடி மயக்கமடைந்துள்ளதோடு, வழக்கத்திற்கு மாறான முறையில் நடந்து கொள்ளத் தொடங்கினார். பின்னர், இதனை அறிந்த பெற்றோர்கள் சிறுவனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுவன் தன்னை நாய் கடித்ததாகவும், அது பற்றி உங்களிடம் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
If you can't vaccinate 🐕, then don't domestic one. Yesterday evening a 14-yr-old Shavez, died in his father's arm, as he did not inform his parents about dog bite, which he suffered more than a month ago due to negligence of his neighbour. #Ghaziabad #UttarPradesh pic.twitter.com/45wVyPw5nC
— Arvind Chauhan 💮🛡️ (@Arv_Ind_Chauhan) September 5, 2023
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் ஷவாஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
ஆண் நண்பருடன் செல்போனில் பேச்சு..! கண்டித்த பெற்றோர்! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!