மேலும் அறிய

துபாயா.. நியூயார்க்கா? குடும்பத்தின் நிதியை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறாரா அதானி? குழுமம் அளித்த விளக்கம்..

கவுதம் அதானி தனது குடும்ப அலுவலகத்தை துபாய் அல்லது நியூயார்க்கில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது

கவுதம் அதானி தனது குடும்ப அலுவலகத்தை துபாய் அல்லது நியூயார்க்கில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்தவர் முகேஷ் அம்பானி. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் என்று பல முக்கியமான துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் இவருக்கு போட்டியாளராக கவுதம் அதானி வலம் வருகிறார். இந்த சூழலில், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும் முகேஷ் அம்பானியிடம் இருந்து கவுதம் அதானி பறித்துள்ளார்.

இந்நிலையில் கவுதம் அதானி தனது குடும்ப அலுவலகத்தை துபாய் அல்லது நியூயார்க்கில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அலுவலகம் அதானி குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்யவும், சொத்துக்கள் வாங்கவும் ஒரு மையப் புள்ளியாக செயல்படும் என தகவல் வெளியானது. வெளிநாட்டில் அலுவலகம் தொடங்குவதன் மூலம் அயல்நாட்டில் தொழில், முதலீடு ஆதிக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதானியின் வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அத்தகவலை அதானி நிறுவனம் மறுத்துள்ளது.

கவுதம் அதானி துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றில் தனது முதலீடுகளை செலுத்தியுள்ளார். கடந்தாண்டு அதானிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமின்றி விமான நிலையங்கள், தரவுகள் மையங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் அதானி நிறுவனம் தனது முதலீடுகளை செலுத்தி பன்மடங்கு லாபம் கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதானியின் பங்கு மதிப்பு 600 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.  இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர்களான அம்பானியும், அதானியும் நிலக்கரியில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.

அதானி தனது குழுவை நேற்று உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதற்கு 2030ம் ஆண்டுக்குள் மொத்தம் 70 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்தாண்டு மிகப்பெரிய நிறுவனங்களான டோட்டல் எஸ்.இ., வார்பர்க் பிக்னஸ் எல்.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ப்ரெஞ்ச் ஆயில் நிறுவனம் 20 சதவீத பங்குகளை அதானி பசுமை சக்தி நிறுவனத்தில் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 பில்லியன் மொத்தமாக அதிகரித்துள்ளது. ஆனால், முகேஷ் அம்பானி 2.7 பில்லியன் குறைந்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற சாதனையை 235 பில்லியன் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் தன் வசம் வைத்துள்ளார். இரண்டாவது பணக்காரர் என்ற பெருமையை அமேசான் நிறுவன முன்னாள் எஸ்.இ.ஓ. ஜெப் பெசோஸ் 183 பில்லியன் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுவிட்ட கவுதம் அதானி 3, 4 இடங்களில் மாறி மாறி இடங்களைப் பிடித்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Embed widget