Watch Video | ''இது போவதற்கான நேரம்'' - விபத்தில் உயிரிழந்த முன்னாள் Miss Kerala கடைசி இன்ஸ்டா வீடியோ!
கார் விபத்தில் உயிரிழந்த முன்னாள் அழகி ஆன்ஷி கபீர் பதிவிட்ட கடைசி இன்ஸ்டா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் முன்னாள் அழகியான ஆன்ஷி கபீரும், இரண்டாம் இடம் பிடித்த அஞ்சனா ஷாஜனும் கார் விபத்தில் உயிரிழந்தனர். கொச்சியில் நடைபெற்ற கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் 2019ம் ஆண்டு அழகிப்போட்டியில் கலந்துகொண்டு முதல் இரு இடங்களை பிடித்தவர்கள்.
இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்து அப்பளமாக நொறுங்கியது. உயிரிழந்த இருவர் உட்பட மேலும் இருவர் காரில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அழகிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இருவருக்கும் பல்வேறு துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2019ல் பட்டம் வென்ற இருவரும் அதன் பின்னர் மாடலாக இருந்து வந்தனர். இந்நிலையில் ஆன்ஷி கபீர் பதிவிட்ட கடைசி இன்ஸ்டா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ''இது போவதற்கான நேரம்'' (It's time to go ) என்ற தலைப்புடன் அவர் பதிவிட்ட வீடியோவை பலரும் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
நீங்கள் இந்த உலகத்தை விட்டும், அன்பானவர்களை விட்டும் செல்லப்போவதைத் தான் இவ்வாறு குறிப்பிட்டீர்களா என அவரது நண்பர்களும், ரசிகர்களும் மன வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர். அடந்த காட்டுக்குள் அவர் நடந்து செல்வது போல அந்த வீடியோ அமைந்துள்ளது. அதனை நேற்று பதிவு செய்துள்ளார் ஆன்ஷி.
View this post on Instagram