வெள்ளை சிங்கக்குட்டியுடன் அதன் அம்மாவின் ஊர்வலம்.. வீடியோ பகிர்ந்த அதிகாரி.. வைரல் வீடியோ
சுஷந்தா நந்தா ஐஎஃப்எஸ் ட்விட்டர் பக்கத்திற்கு ஒரு நாள் விசிட் செய்து பாருங்களேன் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல என்பது புரியவரும்.
சுஷந்தா நந்தா ஐஎஃப்எஸ் ட்விட்டர் பக்கத்திற்கு ஒரு நாள் விசிட் செய்து பாருங்களேன் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல என்பது புரியவரும்.
விலங்குகளில் சேஷ்டையும், அவற்றின் இயல்பும், வேட்டையும் அசத்தலாக, மிரட்டலாக, மகிழ்விக்கக் கூடியதாக இருக்கும்.
அப்படியொரு அழகான வீடியோவைப் பகிர்ந்துள்ளார் சுஷந்தா நந்தா ஐஎஃப்எஸ். அதில் ஒரு வெள்ளை சிங்கக் குட்டி துள்ளிக் குதித்து ஓடுகிறது. வெள்ளைக் காக்கா, வெள்ளைப் புலி, வெள்ளை யானை எல்லாம் ஓரளவுக்கு நமக்கு பரிச்சியம் தான் ஆனால் வெள்ளை சிங்கக் குட்டி ரொம்பவே புதுசு.
உலகிலேயே மூன்று வெள்ளை சிங்கங்கள் தான் இருக்கின்றனவாம். அவற்றில் இதுவும் ஒன்று என சுஷாந்த நந்தா குறிப்பிட்டுள்ளார். ரிசஸிவ் ஜீன் என்ற மரபணு குறைபாட்டால் தான் இந்த சிங்கம் வெள்ளையாக பிறந்துள்ளதாம். மேலும் இது போன்ற வெள்ளை சிங்கங்களைப் பாதுகாக்க குளோபல் ஒயிட் லயன் ப்ரொடக்ஷன் ட்ரஸ்ட் என்ற அமைப்பு உள்ளது. வெள்ளை சிங்கங்கள் தென் ஆப்ரிக்காவில் குறிப்பாக கிரேட்டர் டிம்பாவதி, தெற்கு க்ரூகர் பார்க் பகுதிகளில் உள்ளனவாம்.
Here is a white lion cub for you…
— Susanta Nanda IFS (@susantananda3) December 15, 2022
It is believed that only three white lions in the world are living freely in the wild.
VC: In the clip pic.twitter.com/cNtouLsjLT
இந்நிலையில் சுஷாந்தா நந்தா பகிர்ந்துள்ள வெள்ளை சிங்கக் குட்டி மாஸ் வைரலாகி உள்ளது. இதன் கீழ் பயனர் ஒருவர், உங்களைப் போன்ற அதிகாரிகள் வனத்துறையில் இருப்பது அற்புதமானது. இந்த வெள்ளை சிங்கங்கள் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக இருக்கட்டும். இவை எங்கிருக்கிறது என்பதை மட்டும் சொல்லாதீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
க்யூட் குரங்கு வீடியோ:
அண்மையில் சுஷாந்தா நந்தா ஒரு அழகான குரங்கு குட்டியின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். பொதுவாக குரங்குகளை அனைவருக்கும் பிடிக்கும். அவை எது செய்தாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். அப்படித்தான் இங்கும் ஒரு குரங்கு இருக்கிறது. என்ன வித்தியாசம் என்னவென்றால் இதுதான் உலகிலேயே மிகச் மிகச் சிறிய குரங்கு. கிராம் எடையில் இருக்கும் அந்த குரங்கிற்கு ஒருவர் ஸ்பூனில் உணவை ஊட்டுகிறார். அந்த உணவை குரங்குக்கே உண்டான பாணியில் உட்கொள்ளும் அந்தக் குரங்கு. அந்த வீடியோவை பலரும் ரசித்து பதிவிட்டிருந்தனர்.
ஆசிர்வாதம் செய்த யானை:
இதேபோல் ஆசிர்வாதம் செய்த யானை வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்திருப்பார். அதில், “அந்த ஆசீர்வாதம்... குட்டியை தாய் யானையுடன் வனத் துறை அதிகாரிகள் இணைத்து வைத்தனர். அந்த தாய் யானை அதன் சொர்க்கபுரிக்குச் செல்லும் முன் அழகாக வாழ்த்திச் செல்கிறது. எத்தனை அழகு. தவறுவிடக்கூடாது” என்று பதிவிட்டிருப்பார்.