Fire Accident: திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து; இரண்டு பெட்டிகள் எரிந்து நாசம்
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தின் வால்சாத்திற்குச் சென்ற ஹம்சபர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தின் வால்சாத்திற்குச் சென்ற ஹம்சபர் ரயிலில் (Humsafar Express) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தின் ஸ்ரீ கங்கா நகர் வரை செல்லும் ஹக்சஃபர் ரயில், குஜராத் மாநிலத்தின் சூரத்தை அடுத்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் சென்று கொண்டு இருந்த போது எஞ்சினின் பின்புறத்தில் உள்ள இரண்டு பெட்டிகள் தீ பிடித்ததும் பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து கீழ் இறக்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
#WATCH | Fire breaks out in Humsafar Express, which runs between Tiruchirappalli and Shri Ganganagar, in Gujarat's Valsad; no casualty reported till now pic.twitter.com/p5Eyb7VQKw
— ANI (@ANI) September 23, 2023
நேற்று அதிகாலை 4 மணி 45 நிமிடங்களுக்கு ஹம்சஃபர் விரைவு ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், தீ விபத்துக்கு உள்ளான இரண்டு பெட்டிகள் ரயிலில் இருந்து நீக்கிவிட்டப் பின்னர் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) சுமித் தாக்கூர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். ரயில் வல்சாத் வழியாகச் சென்றபோது பவர் கார்/பிரேக் வேன் பெட்டியில் தீ மற்றும் புகை காணப்பட்டதாக அவர் கூறினார். அருகில் இருந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் துரித நடவடிக்கையால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதிக்கப்பட்ட பெட்டி ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு, ரயில் பாதுகாப்பாக புறப்படுவதை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியளிக்கப்பட்டு வருகிறது” என்று சுமித் தாக்கூர் கூறினார்.
தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.