Prathyusha Garimalla Death: "யாருக்கும் பாரமா இருக்க விரும்பல..மன்னிச்சுருங்க.." ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா தற்கொலை கடிதத்தில் அதிர்ச்சி
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமல்லா நீராவியுடன் கார்பன் மோனாக்சைடு கலந்த வாயுவை சுவாசித்த காரணத்தால் இறந்ததாக போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமல்லா தனது இல்லத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஹைதராபத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வந்த கடந்த சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வீட்டின் காவலர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, காவலர்கள் வந்து பார்த்ததில் பிரத்யுஷா கரிமல்லா தனது பாத்ரூமில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில் நீராவியுடன் கார்பன் மோனாக்ஸைடை கலந்து வாயுவை சுவாசித்த காரணத்தால் அவர் இறந்ததாக போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
Celebrity fashion designer Prathyusha Garimella found dead at her residence
— ANI Digital (@ani_digital) June 11, 2022
Read @ANI Story | https://t.co/T91s9bkDW1#PrathyushaGarimella #BanjaraHillsApartments #CelebrityFashionDesigner pic.twitter.com/zmbtmIhX2c
மேலும் பாத்ரூமில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ மேலும் அந்தக்கடிதத்தில், “ தனிமையில் மட்டுமே வாழ்ந்து வரும் வாழ்கையால் நான் மிகவும் விரக்தி அடைந்து விட்டேன். நான் இதுபோன்ற வாழ்கையை எதிர்பார்க்க வில்லை. இனிமேலும் எனது பெற்றோருக்கு நான் பாரமாக இருக்க விலலை. இந்த முடிவை எடுத்ததற்காக என்னை மன்னிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
சடலத்தை கைப்பற்றி, உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரத்யுஷா அமெரிக்காவில் மாடலிங் படித்தவர். அவரது பெயரிலே 2013-ஆம் ஆண்டு முதல் அவர் பேஷன் டிசைனிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பேஷன் டிசைனராக பிரத்யுஷா இருந்துவந்தார்.
”நான் எப்போதுமே ஃபேஷன் மீது விருப்பத்துடன் இருந்திருக்கிறேன். ஆனால் அதையே எனது தொழிலாக மாற்றவேண்டும் என நான் நினைக்கவில்லை. எனது நண்பர்கள் இதையே தொழிலாக மாற்றிக்கொள்ள வலியுறுத்தினார்கள்” என தனது சமீபத்திய பேட்டியில் பிரத்யுஷா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரத்யுஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்