Evening Headlines: பாஜக தனித்துப் போட்டி... மறைவான இடத்தில் பதுங்கிய பிரதமர்.... இன்றைய டாப் நியூஸ்..!
Evening News Headlines Today, Jan 31: காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவிப்பு
* திருவண்ணாமலையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து, பா.ம.க.வினர் மற்றும் வன்னியர்சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்
* கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது எம்பி. ஜோதிமணி ஆவேசமாக பேசி வெளியேறினார்
* 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அது பாஜக கட்சி எடுத்த முடிவு. இதில், நாங்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை - ஜெயக்குமார்
* தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கவே பாஜக தனித்துப் போட்டி - வானதி சீனிவாசன்
* தஞ்சை மாணவி மரணத்தில் சிபிஐ விசாரணை உண்மையை வெளிக்கொணரும் - மதுரை உயர்நீதிமன்றம்
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
* மினி கிளினிக் மருத்துவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை பணியாற்ற தமிழ்நாடு அரசு அனுமதி
இந்தியா:
* 2022-23ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
* நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது
* நாடாளுமன்றத்தில் கல்வி தொடர்பான திட்டங்கள் குறித்து பேசும்போது குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்
* அரியலூர் மாணவி மரண விவகாரம் தொடர்பாக டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பு பாஜகவினர் போராட்டம்
* ‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ படத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
* 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 11ஆம் தேதி வரை சாலை, பைக் பேரணி, ஊர்வலத்திற்கு தடை நீட்டிப்பு
உலகம்:
* கனடாவில் தடுப்பூசிக்கு எதிராக வெகுஜனப் போராட்டம். மறைவான இடத்தில் பதுங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
* 5 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பு - பிரிட்டன் அரசு அறிவிப்பு
விளையாட்டு:
* அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர். இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள்.
* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கருத்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்