Evening News Headlines Today: சமூக பரவலாக மாறிய ஒமிக்ரான்....விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...இன்றைய டாப் நியூஸ்..!
Evening News Headlines Today, Jan 23: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை கைவிடுக - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
* தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் இரா.நாகசாமி காலமானார்.
* 8 வழிச்சாலை; தமிழக அரசின் நிலை என்ன..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
* சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நேரலையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
* “தஞ்சை பள்ளி மாணவி மரணத்தில் மதமாற்ற சாயம் பூசும் பாஜக” – சிபிஎம் குற்றச்சாட்டு
* வரும் வாரங்களில் தொற்று குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியா:
* நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியது - INSACOC அமைப்பு தகவல்
* குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவின் உயரமான மனிதர் தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்
* வடமேற்கு மாநிலங்களில் புழுதிப்புயல் வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
* சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வுதியத்தை உயர்த்த வேண்டுமென எம்.பி. ரவிக்குமார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை
உலகம்:
* ஆப்கானிஸ்தானில் மினி பேருந்தில் குண்டு வெடித்து 7 பேர் உயிரிழந்தனர்
* இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யப்படையினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன
* பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கார் விபத்தில் இருந்து தப்பினார்
* பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்.
விளையாட்டு:
* ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உகாண்டா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
* சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். மாளவிகா பன்சோட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்