Evening News Headlines Today: விஜய் மீதான எதிர்மறை கருத்துகள் நீக்கம்.. அசிங்கமாய் பேசிய அதிபர்... இன்றைய டாப் நியூஸ்..!
Evening News Headlines Today, Jan 25: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் மீதான தனி நீதிபதியின் எதிர்மறை கருத்துக்களை நீக்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* தியாகிகள் தின வீரவணக்க நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
* சிறுவன் உயிரை பலிகொண்ட புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சிமையம் மூடப்பட்டது - தமிழ்நாடு அரசு
* தமிழ்மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் அறிய செய்கிற அதே நேரத்தில், பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் - 73ஆவது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 56 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
* அரியலூர் மாணவி தற்கொலையை அரசியலாக்க பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
* சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினரை கூட பார்க்கமுடியவில்லை. அதிமுக எதிர்க்கட்சி இல்லை - சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
இந்தியா:
* புதுச்சேரியில் குடியரசு தினத்தன்று ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தேசியக்கொடி ஏற்றக்கூடாது - நாராயணசாமி போர்க்கொடி
* தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி உள்பட 29 சிறுவர்களுக்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகம்:
* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
* கொரோனா தொற்று பரவல் காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
* கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள்.. உலகம் முழுவதும் 600 மில்லியனுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு - யுனிசெஃப் அறிக்கை
விளையாட்டு:
* ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதியானது
* 2022 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - ராஜீவ் ராம் ஜோடி தோல்வி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்