மேலும் அறிய
Advertisement
News Wrap : 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு..! நீட் விலக்கு கோரிய முதல்வர்..! கேப்டவுன் டெஸ்ட்..! இன்னும் பல
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- தமிழக மக்களுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
- காணொலி காட்சியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
- நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் – மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
- 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை இணையவழியில் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
- காவல்துறை காலிப்பணியிடங்கள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஐ.நா. சபையில் தமிழில் பேசியதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் – பிரதமர் மோடி
இந்தியா :
- மருத்துவமனைகளின் முக்கியத்துவத்தை கொரோனா உணர்த்தியுள்ளது – பிரதமர் மோடி
- தமிழ்நாட்டில் மருத்துவ திட்டங்களுக்காக ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி
- மருத்துவ கல்லூரிகள் திறப்பதில் என்னுடைய சாதனையை நானே முறியடித்துக் கொண்டிருக்கிறேன் – 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பில் பிரதமர் மோடி பேச்சு
- தேசிய கல்விக்கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் – பிரதமர் மோடி
- மருத்துவ படிப்புகளை ஊக்கப்படுத்த மத்தியில் இருந்த முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
உலகம் :
- கொரோனாவை ப்ளூ காய்ச்சல் போல கருத வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
- அரசியல் கார்ட்டூன் புத்தகங்களுக்கு தடை விதித்தது சிங்கப்பூர் அரசு
- மீண்டும் மீண்டும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் புதிய தகவல்
- கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சுமார் 1700 பேர் கைது
- கம்போடியாவில் 100 கண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலி உயிரிழந்தது
விளையாட்டு :
- கேப்டவுனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் : முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள்
- கேப்டவுன் டெஸ்டில் பும்ரா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி அணியில் சேர்ப்பு
- 2021ம் ஆண்டு ஐ.பி.எல். எனது ரசித்து ஆடும் கிரிக்கெட் திறனை பாதித்தது – ஏபி டிவிலியர்ஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion