அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பது கஷ்டமா இருக்கா..? மக்களவையில் பளீர் விளக்கம் கொடுத்த அமைச்சர்!
தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பது எளிதானது என மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பது எளிதானது என மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது, ”தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக EPFO ஆல் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த போர்ட்டலில், சாத்தியமற்ற தேவைகள் மற்றும் சிக்கலான செயல்முறைகளுக்கு எதிராக எழும் விமர்சனங்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்ததா..?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து இந்த கேள்விக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். அதில், “தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஒருங்கிணைந்த போர்ட்டலில் உள்ள செயல்முறை எளிமையானது, புரிந்து கொள்ள கூடியது.
வருங்கால வைப்புநிதி திட்ட விதிமுறைகளின்படி, குறைவான ஆவணங்களை தாக்கல் செய்தால் போதும். இந்த ஆன்லைன் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதில் விண்ணப்பதாரர்களுக்கு உதவுமாறு நாடு முழுவதும் உள்ளகிளை அலுவலகங்களுக்கு EPFO உத்தரவிட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், EPF திட்டத்தின் 1952 இன் பத்தி 26 (6) இன் கீழ் உள்ள இணை விருப்பங்களை விளக்கினார். அதில், , EPF திட்டம், 1952 இன் பாரா 26(6) இன் கீழ் கூட்டு விருப்பத்தைப் பொறுத்த வரையில் ஆதாரத்தை பதிவேற்றம் செய்வது கட்டாயமில்லை என்றும், அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு வசதியாக, EPFO ஆல் எந்த நேரத்திலும், ஓய்வூதியம் வழங்குவதற்கு முன், எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
ஓய்வூதிய (திருத்தம்) திட்டம் (Employees Pension (Amendment) Scheme) :
உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு தீர்ப்பில் ஊழியர்களின் ஓய்வூதிய (திருத்தம்) திட்டம் (இபிஎஸ்) 2014 ஐ உறுதி செய்தது. ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ரூ 6,500 லிருந்து ரூ 15,000 ஆக உயர்த்தியது. அதேபோல், ஊழியர்களுடன் சேர்ந்து அவர்களின் முதலாளிகள் அவர்களின் உண்மையான வரம்பில் 8.33 சதவீதத்தை இபிஎஸ் செலுத்த அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.