Watch Video: யானை பசிக்கு பானிபூரி... அடுக்கடுக்காய் பானிபூரிகளை உள்ளே தள்ளும் உணவுப்பிரியர் யானை!
பாகனும் இந்த யானையுடன் மேலே அமர்ந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து பானிபூரிகளை தும்பிக்கையை நீட்டி கேட்டு வாங்கி யானை உண்ணும் வீடியோ சரமாரியாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
யானை ஒன்று மனிதர்களைப் போல் பானிபூரியை அடுக்கடுக்காய் உள்ளே தள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இணையத்தை ஆக்கிரமிக்கும் க்யூட் விலங்குகளின் பட்டியலில் யானைகள் மிக முக்கியமானவை.
நேரில் பார்க்கும்போதாகட்டும், வீடியோக்களாகட்டும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை!
மண்ணை வாரி இறைப்பது தொடங்கி, குளிப்பது, சரிந்து மலைச்சரிவுகளில் இறங்குவது என யானைகளின் ஒவ்வொரு க்யூட்டான செயலும் இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.
அச்சுறுத்தும் யானைகள் தவிர்த்து இணைய வீடியோக்களை ஆக்கிரமிக்கும் யானைகள் தங்களின் க்யூட்டான நடவடிக்கைகளால் நெட்டிசன்களை என்றுமே கவர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக பானிபூரி கடை ஒன்றில் நின்று சரசரவென அடுத்தடுத்து பானிபூரிகளை யானை ஒன்று சாப்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
வீடியோவில் பாகனும் இந்த யானையுடன் மேலே அமர்ந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து பானிபூரிகளை தும்பிக்கையை நீட்டி கேட்டு வாங்கி யானை உண்ணும் வீடியோ சரமாரியாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
இதேபோல் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.
யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.