Exit Polls 2022 LIVE: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உடனுக்குடன்..
ABP Cvoter Exit Polls 2022 Results LIVE Updates: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்
LIVE
Background
ABP Cvoter Exit Polls 2022 Results LIVE Updates:
உத்தரப்பிரதேசம், உத்தராக்கண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகளை நாடே உற்று நோக்கியுள்ளது. இவை தவிர பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
ABP C Voter Exit Poll 2022 LIVE:- உத்தரப்பிரதேசத்தில் பாஜகா தான் மீண்டும் ஆட்சியா?
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 228 முதல் 244 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. சமாஜ்வாதி கட்சி 132 முதல் 148 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 21 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள் 2 முதல் 6 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பாஜகவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ABP C Voter Exit Poll 2022 LIVE: மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா?
மணிப்பூரில் பாஜக தலைமையிலான மீண்டும் அரசு அமைய வாய்ப்பு உள்ளதாக ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Manipur Exit Poll 2022: மணிப்பூர் தேர்தல் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ..#AbpCVoterExitPoll #ABPCVoterExitPollResults #Exitpoll #UPelections2022 #PunjabElection2022 #GoaElections2022 #ManipurElections2022 #UttarakhandElections2022 https://t.co/v9mCLLbyqz
— ABP Nadu (@abpnadu) March 7, 2022
Exit Poll 2022 LIVE: மணிப்பூரில் ஆட்சியை பிடிப்பது யார்?
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 21 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். ஏபிபி-சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP C Voter Exit Poll 2022 LIVE: மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. என்.பிஎஃப் 3 முதல் 7 இடங்களும், என்பிபி கட்சி 10 முதல் 14 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மீண்டும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP C Voter Exit Poll 2022 LIVE: கோவாவில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?
கோவாவில் ஆட்சியை தக்கவைக்குமா பாஜக?
#ExitPollsOnABPNadu | தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - கோவாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
— ABP Nadu (@abpnadu) March 7, 2022
விரிவான செய்திகளுக்கு<< https://t.co/7Iv3yF9Vxvhttps://t.co/wupaoCQKa2 | #ExitPoll #ExitPollResult #Goa #Congress #BKP #MGP #AAP pic.twitter.com/8E8PA8JkJm