மேலும் அறிய

ஜம்மு காஷ்மீரில் 3 கட்ட தேர்தல்.. ஹரியானாவில் ஒரே கட்ட வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது 3 கட்டமாக நடைபுெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல, ஹரியானாவில் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில தேர்தல் அறிவிப்பு: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்ட தகவலின்படி, ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து, செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவுக்கு ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. 

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜீவ் குமார், "ஹரியானாவில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 73 பொது, எஸ்சி ரிசர்வ் தொகுதிகள் 17 உள்ளன. ஹரியானாவில் மொத்தம் 2.01 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

தலைமை தேர்தல் ஆணையர் சொன்ன முக்கிய தகவல்கள்:

அதில், 1.06 கோடி பேர் ஆண்கள், 0.95 கோடி பேர் பெண்கள். 4.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள். 40.95 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள். ஹரியானாவின் வாக்காளர் பட்டியல் 27 ஆகஸ்ட் 2024 அன்று வெளியிடப்படும்.

மக்களவை தேர்தலின்போது, ​​ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர். நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். அவர்களின் முகத்தில் உள்ள பிரகாசம் இதற்கு ஒரு சான்றாக இருந்தது. முழுத் தேர்தலும் செழிப்பான அரசியல் பங்கேற்பு இருந்தது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் அடுக்குகள் வலுப்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 74 பொது, எஸ்சி ரிசர்வ் தொகுதிகள் 7 உள்ளனர். பழங்குடி ரிசர்வ் தொகுதிகள் 9 உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

அதில், 44.46 லட்சம் பேர் ஆண்கள். 42.62 லட்சம் பேர் பெண்கள். 3.71 லட்சம் முதல்முறை வாக்காளர்கள். 20.7 லட்சம் இளம் வாக்காளர்கள். வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி, அமர்நாத் யாத்திரை முடிவடையும். இறுதி வாக்காளர் பட்டியலும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியிடப்படும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget