ஏபிஜி கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 26 இடங்களில் சிபிஐ சோதனை…
குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் செய்துள்ள மோசடிதான் நாட்டிலேயே மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிடப்படுகிறது
ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமான மும்பை, புனை, சூரத் உள்ளிட்ட 26 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
பல்வேறு வங்கிளில் கடன் பெற்று ரூ.22 ஆயிரத்த 842 கோடி மோசடி செய்த வழக்கு மற்றும், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் இந்தரெய்டு நடப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் செய்துள்ள மோசடிதான் நாட்டிலேயே மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக மும்பையில் 24 அலுவலகங்கள் மற்றும் இல்லங்கள் உள்ளன, புனேயில் ஒர் இடத்திலும், சூரத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரெய்டு நாளையும் தொடரும் என அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு விரிவான அறிக்கையில், 2005 மற்றும் 2012 க்கு இடையில் ABG ஷிப்யார்டின் கணக்கில் பெரும்பாலான பணம் செலுத்தப்பட்டதாக பிப்ரவரியில் சிபிஐ கூறியது, மேலும் கடன் கணக்கு நவம்பர் 30, 2013 இல் செயல்படாத சொத்தாக (NPA) மாறியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத் தொடக்கத்தில் ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிஷி அகர்வாலிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை வேறு எந்தப் பணிகளுக்கு திருப்பிவிட்டுள்ளது என்பதையும், போலி நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டுள்ளது குறித்தும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
ஏபிஜி நிறுவனத்தின் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறது. சிபிஐ விசாரணை நடத்தி, தாக்கல் செய்த அறிக்கையி்ன் அடிப்படையில்தான் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஏபிஜி நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 28 வங்கிகளில் மோசடி செய்துள்ளது. அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் ரூ.7,089 கோடி, ஐடிபிஐ வங்கியில் ரூ.3,639 கோடி, எஸ்பிஐ வங்கியில் ரூ.2,925 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.1614 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1,244 கோடி மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு EY ஆல் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ஆய்வில், ஏப்ரல் 2012 மற்றும் ஜூலை 2017 க்கு இடையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சதி செய்து நிதியை திசை திருப்புதல், முறைகேடு மற்றும் குற்றவியல் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.