ECI: ”பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இதை பேசுவதை நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்ன?
Election Commission of India : மக்களவை தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக , காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
![ECI: ”பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இதை பேசுவதை நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்ன? ECI sends notice to Nadda, Kharge, asks BJP Congress parties to exercise restraint ECI: ”பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இதை பேசுவதை நிறுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையம் தெரிவித்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/39ebc36239b5821fa75e9a7cf96b34441716372426997572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவை தேர்தல் பரப்புரையில், அரசியல் கட்சி தலைவர்கள் மதம், சாதி ரீதியிலான பேச்சுக்கள் கூடாது என்றும், அரசியலமைப்பு ஒழிக்கப்படும் என்றும் பரப்புரை செய்ய கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கண்டனத்துக்குள்ளான தேர்தல் பரப்புரைகள்:
சமீப நாட்களாக அரசியல் கட்சியினர் மதம், சாதி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தெரிவித்ததாவது, அரசியல் கட்சிகளின் நட்சத்திர பரப்புரையாளர்கள், தங்கள் பேச்சுக்களை கவனத்துடனும் கண்ணியமான முறையில் பேசுமாறும், பரப்புரையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது,
சாதி, சமூகம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி பரப்புரை செய்வதை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தவிர்க்க வேண்டும். இரு கட்சிகளின் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் தங்கள் பரப்புரையில் மத மற்றும் வகுப்புவாத கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவின் நீடித்து நிலைத்திருக்கும் சமூகப் பண்பாட்டுச் சூழலானது, தேர்தலால் பாதிக்கப்படக் கூடாது . இந்திய வாக்காளர்களின் தேர்தல் அனுபவத்தின் பாரம்பரியத்தை, பலவீனப்படுத்த பாஜக மற்றும் காங்கிரஸை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம் ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் வரம்பற்ற வகையில் செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளது.
பாஜகவுக்கு தெரிவித்தது என்ன?
சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய பிரச்சார உரைகளை நிறுத்துமாறு பாஜகவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தெரிவித்தது என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் போன்ற தவறான கருத்துகளை நட்சத்திரப் பிரச்சாரகர்கள் வெளியிடக் கூடாது என்று காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்னிவீர் திட்டம் குறித்து பேசும் போது, பாதுகாப்பு படைகளை அரசியலாக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பு படைகளின் சமூக-பொருளாதார அமைப்பு குறித்து பிளவு படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் காங்கிரஸ் பரப்புரையாளர்கள் மற்றும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
7 கட்ட தேர்தல்:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)