Delhi Earthquake: டெல்லியில் திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவு
Delhi Earthquake: டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கமானது டெல்லி பகுதியில் உணரப்பட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன், இதே பகுதியில், அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
பாகிஸ்தான் நிலநடுக்கம்:
பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இந்தியாவின் டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, இந்த நலநடுக்கமானது, மதியம் 12:58 மணிக்கு பாகிஸ்தானில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 அளவு பதிவாகியிருக்கிறது. , நிலநடுக்கமானது, இஸ்லாமாபாத்திற்கு தென்மேற்கே 359 கிலோமீட்டர் மற்றும் அமிர்தசரஸுக்கு மேற்கே 415 கிலோமீட்டர் தொலைவில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பாதிப்பில் உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவல்கள் இல்லை.
ஒரு மாதத்தில் 2 நிலநடுக்கம்:
ஒரு மாதத்தில் டெல்லியில் நிலநடுக்கமானது உணரப்பட்டிருப்பது இரண்டாவது முறையாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 5.7 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், டெல்லி-என்சிஆர் மற்றும் ராஜஸ்தான் வரை அதிர்வுகளுடன் ஆப்கானிஸ்தானை உலுக்கியது. இஸ்லாமாபாத், பஞ்சாபின் சில பகுதிகள் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் காபூலில் இருந்து வடகிழக்கே 277 கிலோமீட்டர் தொலைவில் 255 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 11:26 மணிக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நில நிலநடுக்கம் ஏன்?
இமயமலைக்கு அருகாமையில் இருப்பதால், டெல்லி மற்றும் வட இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயலில் நில அதிர்வு மண்டலத்தில் இருக்கின்றன. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகள் உணரப்படுகின்றன.
இந்திய நாடு நான்கு நில அதிர்வு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலம் 5 நில அதிர்வு ரீதியாக மிகவும் செயலில் உள்ள பகுதியாகும், அதே நேரத்தில் மண்டலம் 2 குறைவாக உள்ளது பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. டெல்லி நில அதிர்வு மண்டலம் 4 இன் கீழ் வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EQ of M: 5.8, On: 11/09/2024 12:58:03 IST, Lat: 31.25 N, Long: 70.52 E, Depth: 33 Km, Location: Pakistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) September 11, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/HlcwIQPI3q