மேலும் அறிய

Draupadi Murmu : வரலாற்று தருணம்.. பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர்...திரௌபதி முர்மு குறித்த முக்கிய 10 தகவல்கள்

நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று காலை 10:15 மணிக்கு பதவியேற்று கொண்டார்.

நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று காலை 10:15 மணிக்கு பதவியேற்று கொண்டார். இதையடுத்து, வழக்கமாக 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவி  பிரமாணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து 10 விஷயங்களை தெரிந்து கொள்வோம்:

  • குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவராக பதவி காலம் முடிவடையவுள்ள வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • இவர்களை தவிர, முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சிகளை சேர்ந்து எம்பிக்கள் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
  • பதவியேற்புக்கு முன்பாக, திரௌபதி முர்மு, அண்ணல் காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு சென்று தேசபிதாகவுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், பதவிகாலம் முடிவடைய உள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து, குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்முவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர்.
  • முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று, திரௌபதி முர்மு, வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் விருந்தளித்தார். 
  • 64 வயதான திரெளபதி முர்மு, வியாழன் அன்று, எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வரலாறு படைத்தார். முதல் பழங்குடியினராகவும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெறுமையையும் பெற்றுள்ளார்.
  • முர்முவின் சொந்த ஊரான ஒடிசாவின் ராய்ராங்பூர் வியாழக்கிழமை முதல் திருவிழா கோலம் பூண்டது. அவரது பதவியேற்பு விழாவைக் கொண்டாட அவரது கிராமத்தில் உள்ள மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
  • 2015 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெறுமையும் முர்முவையே சாரும்.
  • ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்மு, பிஜு ஜனதா தளம், பாஜக ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு விகித்தார்.
  • ஒடிசா அரசில் போக்குவரத்து, வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அமைச்சகங்களை கையாண்ட பல்வேறு நிர்வாக அனுபவத்தை கொண்டவர் முர்மு.
  • கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முர்மு, பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவரானார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
Telangana: தேர்தல் வாக்குறுதி.. ஒரே வாரத்தில் 500 தெரு நாய்களை கொன்ற அதிகாரிகள்!
Telangana: தேர்தல் வாக்குறுதி.. ஒரே வாரத்தில் 500 தெரு நாய்களை கொன்ற அதிகாரிகள்!
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Embed widget