மேலும் அறிய

Andhra Train Mishap: ஆந்திராவில் 14 பேரை பலிவாங்கிய ரயில் விபத்து - ஓட்டுனர் கிரிக்கெட் பார்த்தது விசாரணையில் அம்பலம்

Andhra Train Mishap: கடந்த ஆண்டு ஆந்திராவில் 14 பேர் பலியான ரயில் விபத்திற்கான காரணத்தை, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்/

Andhra Train Mishap: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரா ரயில் விபத்து:

ஆந்திர மாநிலம் , விஜயநகரம் மாவட்டம், கந்தகப்பள்ளியில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில், இரவு 7 மணியளவில் ராயகட பயணிகள் ரயில் பின்னால் இருந்து விசாகப்பட்டினம் பலாசா ரயிலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்த ரயிலின்  ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தங்களது தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து தான், என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  

கவனச் சிதறல்களை தடுக்க நடவடிக்கை

இந்திய ரயில்வேயால் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ்,  ”சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபத்தானது, பணியின் போது லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கிரிக்கெட் போட்டியை கண்டதால் ஏற்பட்ட கவனத்தை சிதறலால் நிகழ்ந்துள்ளது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் கவனமாக இருப்பதை உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரயிலை பாதுகாப்பாக இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

பாதுகாப்பில் கவனம்:

நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க  ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.  ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களின் (CRS) உத்தியோகபூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், விபத்து நடந்த உடனேயே ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ”ராயகட பாசஞ்சர் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுனர் மோதியதில் தவறு இருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, குறைபாடுள்ள இரண்டு ஆட்டோ சிக்னல்களை அவர்கள் புறக்கணித்தனர்” என்பது தெரிய வந்தது.  இந்த விபத்தில் இரு பணியாளர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியேறிய 100+ விஞ்ஞானிகள்... முடங்கும் முக்கிய திட்டங்கள்? பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
வெளியேறிய 100+ விஞ்ஞானிகள்... முடங்கும் முக்கிய திட்டங்கள்? பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Embed widget