DRI Seizure: அதிரடி நடவடிக்கை.. ஹைதராபாத்தில் 25 கிலோ ஊக்க மருந்து பறிமுதல்.. டி.ஆர்.ஐ அதிகாரிகள் செய்த சம்பவம்
உளவுத்துறை வருவாய் இயக்குநரகம் (டிஆர்ஐ) ஹைதராபாத்தில் உள்ள இரண்டு ரகசிய தயாரிப்பு ஆய்வகங்களில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 25 கிலோ ஊக்க மருந்து மெபெட்ரோனைக் கைப்பற்றியது
உளவுத்துறை வருவாய் இயக்குநரகம் (டிஆர்ஐ) ஹைதராபாத்தில் உள்ள இரண்டு ரகசிய தயாரிப்பு ஆய்வகங்களில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 25 கிலோ ஊக்க மருந்து மெபெட்ரோனைக் கைப்பற்றி, 7 பேரை கைது செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Directorate of Intelligence Revenue (DRI) busted two clandestine Mephedrone manufacturing labs at Hyderabad and neutralised the entire network by nabbing the mastermind & financer. Around 25 kg of Mephedrone worth around Rs 50 crore was seized: DRI pic.twitter.com/Y1NBMjlxwT
— ANI (@ANI) December 26, 2022
குறிப்பிட்ட உளவுத்துறையின் அடிப்படையில், டிஆர்ஐ டிசம்பர் 21, 2022 ரகசிய திட்டத்தை செயல்படுத்தியது. இதனடிப்படையில் இரண்டு ரகசிய ஆய்வகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அபோது ஊக்க மருந்து உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
டிஆர்ஐ அதிகாரிகள், கள்ளச் சந்தையில் ரூ.49.77 கோடி மதிப்பிலான 24.885 கிலோ மெபெட்ரோன் மருந்து முழுமையாக தயார் செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றியது, மேலும் ரூ.18.90 லட்சம் மதிப்பில் உள்ள மூலபொருட்களை கைப்பற்றினர். இந்த ஆய்வகங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். 60 லட்சம் பணத்துடன் நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, இந்தச் செயலின் மூளையாக செயல்பட்டவரும், முக்கிய நிதியாளரும் கோரக்பூரில் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் 2016 ஆம் ஆண்டு இந்தூரில் 236 கிலோ எடையுள்ள எபிட்ரைனை ரகசியமாக தயாரித்ததற்காக டிஆர்ஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தூர் சிறையில் இருந்து தப்பி செல்லும் முயற்சி, ஹைதராபாத்தில் கொலை வழக்கு மற்றும் வதோதராவில் கொள்ளை வழக்கு ஆகியவை இவர்கள் மீது ஏற்கனவே இருக்கிறது.
இரகசிய ஆய்வகங்களை நடுநிலையாக்குவது மற்றும் முழு போதைப்பொருள் சிண்டிகேட்டையும் ஒன்றினைப்பது போன்ற பல இந்த சோதனை முற்றுப்புள்ளி வைத்தது. ஜூலை-ஆகஸ்ட் 2022 இல் ஹரியானாவின் யமுனா நகரில் இதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றது.
நடப்பு நிதியாண்டில் DRI ஆல் நடத்தப்பட்ட இரண்டாவது தொழிற்சாலை சோதனை இதுவாகும். "இந்த நிதியாண்டில் மட்டும் (நவம்பர் 2022 வரை), டிஆர்ஐ அதிகாரிகள் சுமார் 990 கிலோ ஹெராயின், 88 கிலோ கோகோயின், 10,000 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள், 2,400 லிட்டர் ஃபென்செடைல் இருமல் சிரப் மற்றும் பல்வேறு தீங்கு விளைவிக்கும் NDPS பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.