Kalaiselvi CSIR DG:அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநரான தமிழர் கலைச்செல்வி!
சிஎஸ்ஐஆர் நிறுவனத்திலேயே நுழைவு நிலை விஞ்ஞானியாக தன் பணி வாழ்வைத் தொடங்கியவர் கலைச் செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பை வழிநடத்தும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்ஐஆரில் பணி வாழ்வைத் தொடங்கியவர்
4 ஆயிரத்து 600 விஞ்ஞானிகள், 8 ஆயிரம் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் முதல் பெண் இயக்குநராக விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க:Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
Dr N Kalaiselvi has been appointed as the DG, CSIR & Secretary, DSIR.
— CSIR (@CSIR_IND) August 6, 2022
Hearty congratulations to Dr Kalaiselvi from the CSIR Family.@PMOIndia @DrJitendraSingh @PIB_India @DDNewslive pic.twitter.com/oHIZr9uoMG
சிஎஸ்ஐஆர் நிறுவனத்திலேயே நுழைவு நிலை விஞ்ஞானியாக தன் பணி வாழ்வைத் தொடங்கியவர் கலைச் செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கலைச்செல்வி, தனது பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் படித்துள்ளார்.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
திருநெல்வேலியைச் சேர்ந்தவர்
லித்தியம் அயன் பேட்டரிகள் துறையில் தனது பங்களிப்புக்காக அறியப்படும் கலைச்செல்வி தற்போது தமிழ்நாட்டில், காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்ற நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் செயலாளராகவும் கலைச்செல்வி பொறுப்பேற்க உள்ளார்.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்