நிர்மலா சீ்தாராமனின் மகள் திருமணம் செய்து கொண்ட பிரதிக் யார் தெரியுமா? பிரதமருக்கு ரொம்ப வேண்டப்பட்டவராம்!
குஜராத்தைச் சேர்ந்த இவர், மோடியின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது. அவர் பிரதமர் அலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் உத்திகளைக் கையாள்வதில், இணைச் செயலர் பதவியில் உள்ள சிறப்புப் பணி (OSD) அதிகாரி.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயி, பிரதிக் ஜோஷி என்னும் பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும், பிரதமருக்கு நெருக்கமான உதவியாளரை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நிர்மலா சீதாராமனின் இல்லத்தில் கடந்த புதன்கிழமை எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார்.
நிர்மலா சீத்தாராமன் மகள் திருமணம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயி, பிரதிக் தோஷியை பெங்களூருவில் வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டார். இந்த எளிய விழாவின் கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து திருமண செய்தி வெளிவந்தது. குஜராத்தைச் சேர்ந்த பிரதீக் என்பவருக்கும், நிர்மலா சீதாராமன் மகள் வங்கமாயிக்கும் திருமணம் பிராமண முறைப்படி நடந்தது. உடுப்பி அடமாரு மடத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் மணமக்களை ஆசிர்வதிக்க வந்திருந்தனர். அடமாரு மடத்தின் வேத முறைப்படி இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும், அரசியல் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
🎊 Union Finance Minister Nirmala Sitharaman's daughter got married in Bangalore yesterday. 🎉🎉 The news was not on TV or on print media. An example of simple living and working with nation first principles. 🙏🙏🙏 pic.twitter.com/r818unikZP
— Deepak Kumar. 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💪 (@DipakKumar1970) June 8, 2023
வங்கமாயி என்ன செய்கிறார்?
வங்கமாயி மின்ட் லவுஞ்சின் ஃபீச்சர்ஸ் துறையில் புத்தகங்கள் மற்றும் கலாச்சாரப் பிரிவில் பணிபுரிகிறார். இதற்கு முன்பு தி ஹிந்து நாளிதழில் ஊடகவியலாளராக அவர் பணியாற்றினார். நார்த்வெஸ்டர்ன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். திருமணத்தின் போது, வைரலான வீடியோக்களின் படி, வங்கமாயி இளஞ்சிவப்பு நிற புடவையில் காணப்பட்டார், பிரதீக் வெள்ளை சால்வை மற்றும் வேஷ்டி அணிந்திருந்தார். நிர்மலா சீதாராமன் பிரகாசமான ஆரஞ்சு மற்றும், நீல நிற புடவை அணிந்திருந்தார்.
பிரதிக் தோஷி யார்?
பிரதிக் தோஷி பிரதம மந்திரி அலுவலகத்தில் (PMO) அதிகாரியாக வேலை செய்பவர். குஜராத்தைச் சேர்ந்த இவர், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது. அவர் பிரதமர் அலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் உத்திகளைக் கையாள்வதில், இணைச் செயலர் பதவியில் உள்ள சிறப்புப் பணி (OSD) அதிகாரி. அவரது பணியானது, ஆராய்ச்சி மற்றும் உத்திகள் வகுப்பது, உள்ளிட்ட விஷயங்களில் பிரதமருக்கு செயலர் உதவியை வழங்குவதை உள்ளடக்கியது. அவர் ஜூலை 2019 இல் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய சம்பளம் என்ன?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, PMO இல் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே லெவல் 14 ஊதியக் குழுவில் தோஷி வருவார். அதன்படி அவரது மாத அடிப்படை ஊதியம் ரூ.1,57,600 என PMO இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோஷி சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.