மேலும் அறிய

`பெண்கள் என்ன உடுத்துகிறார்கள் என்பதில்லை சமூகத்தின் பிரச்னை!’ - கனிமொழி ட்வீட்!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவியை ஆண் மாணவர்கள் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பிய விவகாரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார் மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி.

கர்நாடகாவில் கடந்த வாரம் அரசுக் கல்லூரிகளில் ஹிஜாப் உடை மீதான தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவிகளின் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை  மாணவர்கள் `ஜெய்ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பி முற்றுகையிட, மாணவி `அல்லாஹு அக்பர்’ என்று பதிலளித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

பல்வேறு அரசியல் கட்சியினரும் மாணவியின் தைரியத்தைப் பாராட்டி பதிவிட்டு வருவதோடு, அரசியல் தலைவர்கள் சமூகத்தில் இந்தியர்களைச் சமம் எனக் கருதும் போக்கு குறைந்திருப்பதாகவும், தனியாக இருந்த மாணவியை கும்பலாக இருந்த ஆண் மாணவர்கள் எதிர்கொண்ட விதம் முதலானவற்றை விமர்சித்தும் வருகின்றனர். 

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர 5 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

`பெண்கள் என்ன உடுத்துகிறார்கள் என்பதில்லை சமூகத்தின் பிரச்னை!’ - கனிமொழி ட்வீட்!

இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். மாணவர்களிடையே மத மோதலைத் தூண்டுவதாக இந்த விவகாரம் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. 

இந்நிலையில் நேற்று (பிப்.7) கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை.  

`பெண்கள் என்ன உடுத்துகிறார்கள் என்பதில்லை சமூகத்தின் பிரச்னை!’ - கனிமொழி ட்வீட்!

இந்நிலையில் கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் உள்ள கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை, காவித் துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் `ஜெய்ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பினர். பதிலுக்கு மாணவி `அல்லாஹூ அக்பர்’ என்று கைகளை உயர்த்தி, கோஷமிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை உறுப்பினரும், திமுகவின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, `இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சாதி, மதம், மொழி, இன பேதங்கள் இன்றி அனைவரும் சமம் என்ற கருத்திற்கு எதிராகத் தொடர்ந்து ஒரு தரப்பு இயங்கி வருகிறது. அவர்களின் சதிக்கு சில கல்வி நிறுவனங்களும் பலியாகி வருகின்றன. மத நல்லிணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் பண்பாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கு ஒன்றுகூட வேண்டிய நேரமிது. பெண்கள் என்ன ஆடை உடுத்துகிறார்கள் என்பதில்லை இந்த சமூகத்தின் பிரச்சனை.’ என்று கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget