மேலும் அறிய

Special Session: நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்.. நீட் முதல் மகளிர் மசோதா வரை.. ஸ்கெட்ச் போட்ட திமுக

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

நாளை மறுநாள், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக I.N.D.I.A கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்பப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்த நாளில் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை” துவக்கி வைத்து - ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய - தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

காவிரி பிரச்னை:

"காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல்,  மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்திட வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல் - இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்யவில்லை. பிரதமரின் முதல் சந்திப்பிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் இது பற்றி வலியுறுத்தியுள்ளார். இன்றுவரை மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு  தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

நீட்:

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும் - மத்திய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு செய்து வரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்.

பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி - “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை” அண்ணா பிறந்த நாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தை கழித்துள்ளது மத்திய பாஜக அரசு.  

மகளிர் மசோதா:

முதலமைச்சர் ஸ்டாலினும், மகளிர் மசோதாவை நிறைவேற்றக் கோரி எண்ணற்ற முறை கோரிக்கைகள் வைத்தும் அதன் மீதான விவாதத்திற்கு கூட பாஜக அரசு தயாராக இல்லை. எனவே இந்த சிறப்பு கூட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

இச்சிறப்பு கூட்டத்தொடரில், “மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்”, “அரசுதுறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்”, “தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்”, “பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்”,  “உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளோடு “இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்” மசோதாவையும் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

மத்திய பாஜக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜானா” திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை  தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி.  இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்.

எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த மத்திய பாஜக அரசு, தற்போது “I.N.D.I.A” கூட்டணிக்கு அஞ்சி “பாரத்” என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது. 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் - முற்றிலும் தோல்வியுற்ற மத்திய பாஜக அரசை, நாடாளுமன்றத்தில் “I.N.D.I.A” கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Embed widget