Shocking Video : டெல்லியில் ஷாக்.. ரோட்டில் நின்றவரை 3 கி.மீ வரை இழுத்துச்சென்ற கார்.. மடக்கி பிடித்த போலீஸ்...என்ன நடந்தது...?
Shocking Video : டெல்லியில், 3 கிலோ மீட்டர் தூரம் வரை கார் பேனட்டில் தொங்கியபடி சென்றவரின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Shocking Video : டெல்லியில் ஷாக்.. ரோட்டில் நின்றவரை 3 கி.மீ வரை இழுத்துச்சென்ற கார்.. மடக்கி பிடித்த போலீஸ்...என்ன நடந்தது...? Delhi shocking incident car roof man lying for 3 km and he died car driver arrest viral video Shocking Video : டெல்லியில் ஷாக்.. ரோட்டில் நின்றவரை 3 கி.மீ வரை இழுத்துச்சென்ற கார்.. மடக்கி பிடித்த போலீஸ்...என்ன நடந்தது...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/6bc290aa17757c311cb585de4a52aea81683100414659333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Shocking Video : Shocking Video : டெல்லியில், 3 கிலோ மீட்டர் தூரம் வரை கார் பேனட்டில் தொங்கியபடி சென்றவரின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கஸ்தூரிபா காந்தி நகரில் நேற்று இரவு 11 மணிக்கு காரின் முன்பக்க பேனட்டில் ஒருவர் தொங்கியபடி இருக்க, அந்த காரை ஓட்டும் ஓட்டுநர் அவரை பொருட்படுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளார். ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் வரை பேனட்டில் ஒருவர் தொங்கியபடி பயணித்துள்ளார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பலரும் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
#WATCH | Delhi: At around 11 pm last night, a car coming from Ashram Chowk to Nizamuddin Dargah drove for around 2-3 kilometres with a person hanging on the bonnet. pic.twitter.com/54dOCqxWTh
— ANI (@ANI) May 1, 2023
மேலும், இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாகனத்தை முந்திச் சென்ற வழிமறித்து பின்னரே கார் நிறுத்தப்பட்டது. கார் நிறுத்தப்பட்டவுடன் பேனட்டில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்டார். உடனே போலீசார் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கார் ஓட்டுநர் ஹர்னீத் ஸ்ங் சாவ்லா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் மதுபோதையில் இதுபோன்று நடத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. அதேபோன்று காரில் தொங்கியபடி வந்தவர் தீபன்சு வர்மா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
வாடகை கார் ஓட்டுநரான இவர் பயணி ஒருவரை இறக்கிவிட்டு வரும் வழியில் ராம்சந்த் கார் தன்னுடைய காரில் மோதியது. இதனால் இறங்கி நியாயம் கேட்க காரின் முன்பக்கம் சென்றபோது ராம்சந்த் குமார் தான் சொல்வதை கேட்காமல் காரை இயக்கியதாக தெரிவித்தார். மேலும் பலமுறை காரை நிறுத்த சொல்லியும் அவர் நிறுத்தவில்லை என்று தீபன்சு வர்மா கூறியதாக தெரிகிறது.
இதனால் படுகாயமடைந்த தீபன்சு வர்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரில் கார் ஓட்டுநர் ஹர்னீத் ஸ்ங் சாவ்லாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
சென்னை விமான நிலையத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
The kerala story: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)