24 மணி நேரத்தில்...5 உயிரிழப்பு...டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 2,162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 12.64 ஆக உள்ளது.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 2,162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 12.64 ஆக உள்ளது.
2162 New Corona Cases Found In Delhi On Sunday – Corona In Delhi: More than two thousand new corona cases in Delhi, five died; Infection rate more than 12 percent https://t.co/hxdrjDpdUa
— The Hindu Wire (@HinduWire) August 14, 2022
அதே நேரத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 12வது நாளாக ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று டெல்லியில் கொரோனா காரணமாக ஒன்பது இறப்புகள் பதிவாகியிருந்தது. 2,031 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Delhi Reports 2162 New Corona Cases And 5 Deaths In The Past 24 Hours On Sunday https://t.co/U8pRsTVE8H
— TIMES18 (@TIMES18News) August 14, 2022
பாதிப்பு விகிதம் 12.34 ஆக இருந்தது. ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை அன்று 10 இறப்புகள் நிகழ்ந்தன. 2,136 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு விகிதம் 15.02 ஆக இருந்தது.
கடைசியாக, பிப்ரவரி 13 அன்று தேசிய தலைநகரில் கொரோனா காரணமாக அதிகபட்சமாக 12 இறப்புகள் பதிவாகி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று 17,106 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது என டெல்லி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
It’s getting serious in Delhi. The positivity rate in the national capital has inched closer to 18 percent!!
— Prashant Kumar (@scribe_prashant) August 10, 2022
2146 fresh cases of Corona virus reported in the past 24 hours. EIGHT deaths too reported!!
Take it seriously, Delhi! Mask up!!
புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகளுடன், டெல்லியின் மொத்த கொரோனா எண்ணிக்கை 19,84,595 ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,381 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்